திருமணப் பொருத்தத்தில் ராசிக்கு 6, 8 சேர்க்க கூடாது! சேர்த்தால்?!

அஷ்டமம் என்றால் எல்லாருக்கும் ஒருசில விளக்கம் கட்டாயம் தெரிந்திருக்கும்.
திருமணப் பொருத்தத்தில் ராசிக்கு 6, 8 சேர்க்க கூடாது! சேர்த்தால்?!

அஷ்டமம் என்றால் எல்லாருக்கும் ஒருசில விளக்கம் கட்டாயம் தெரிந்திருக்கும். இருந்தாலும் நாம் சிறு விரிவாக்கத்தைப் பார்ப்போம். வேத ஜோதிடப்படி அஷ்டமம் என்றால் எட்டு அவரோடு சனி பகவான் சம்பந்தப்படுவார். ஜாதகத்தில் எட்டு என்றால் பயம் நம்மை ஆட்கொள்ளும். ஆனால் எட்டில் பிறந்த ஏராளமான மக்கள் கஷ்டப்பட்டு  உழைப்பால் உயரத்தில் தூக்கிவிட்டது உண்டு. நம் ஸ்ரீகிருஷ்ண பகவான் எட்டாவது திதியான அஷ்டமி திதியன்று பிறந்து நம்மை ஆட்கொண்டவர். நாம் சுப முகூர்த்தம் குறிக்கும்போது எட்டு எண்ணை ஒதுக்கிவிடுவார்கள். முக்கியமாக எட்டு என்றால் சனியின் ஆதிக்கம் கொண்ட எண் ஆகும்.

அஷ்டமயோக மரும்பிணி சண்டையும்

நஷ்டங்கிலேசம் பகைநன்மரணமும்

துஷ்டடம்பமும் துன்றுமலையேறி

கஷ்டப்பட்டு கலங்கி விழுதலே

புலிப்பாணி இப்பாடலில் கூறுவது அஷ்டம பாவகத்தால் அரிய நோய்களைப் பற்றியும், விளையும் சண்டைகளையும், நஷ்டங்களையும் மனம்பேதலித்தலையும், பகைமை, மரணசம்பவத்தை, துஷ்டத்தனத்தை, வீண்டம்பத்தையும், மலை மீது ஏறி மிகுந்த துன்பமுற்றுக்கலங்கி விழுதலையும் அறியலாம்.

அஷ்டமம் என்ற பாவத்தில் இருக்கும் கிரகம் அந்த பாவ அதிபதி என்னென்ன செய்வார் என்று பார்த்தால் சோம்பல் தன்மை, நீண்ட நாள் நோய், பண இழப்பு, ஆயுள் பாதிக்கும் மாதிரியான செயல், தொழிலில் மற்றும் குடும்பத்தில் அவமானம், கடனில் மாட்டிக்கொண்டு தவிப்பது, வெளிநாட்டில் தங்கும் ஜாதகருக்கு பிரச்னை, மன அமைதியை சீர்குலைக்கும் செயல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சிலருக்கு ஒரு சில நன்மை என்றால் ஆயுள் காப்பீடு தொகை கிட்டும், உழைப்பு இல்லாத எதாவது வருமானம் கிட்டும். இவை அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும்.

ஜாதகத்தில் பாவ கிரகத்துக்கு உரிய காரக கிரகம் அந்த பாவத்தில் அமர்ந்தால் காரகோ பாவ நாஸ்தி செய்யும் என்பது ஒரு விதி. எடுத்துக்காட்டு சொன்னால் புரியும் அதாவது சூரியன் என்பவர் ஒரு பிதுர் காரகன், அவர் அவருடைய பிதுர்ஸ்தானமாகிய 9ஆம் பாவத்தில் இருந்தால் அந்த தந்தை காரகம் கெடுத்து விடும். அதாவது  ஜாதகருக்கு அப்பாவால் கிடைக்கும் நன்மைகள் கிட்டாது. இதேபோல் சந்திரன், குரு, புதன், செவ்வாய் என்று அவரவர் அந்தெந்த பாவ காரகத்தில் அமர்ந்தால் அந்த பாவம் நாஸ்தி ஆகிவிடும். ஆனால் எட்டுக்குரிய சனி என்பவர் மட்டும் எட்டில் அமர்ந்தால், சனி பகவான் ஆயுளை அதிகப்படுத்தி, அந்த ஜாதகரை என்னவெல்லாம் கொடுமையான துன்பத்தையும், நோயைத் தரமுடியுமோ அவ்வளவு தருவார். இந்த இடத்தில் அஷ்டம சனியாக இருந்து தொல்லைக்கொடுப்பார் எப்படி என்று ஆராய்வோம். பிறந்த ஜாதக கட்டத்தில் 8-இல் சனி இருந்தால் ஆயுள் அதிகம் அதுவும் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் தீர்க்க ஆயுள் என்பது ஒரு கூற்று. ஆனால் இதே மாதிரி அமைப்பு உள்ளவர்களை கேட்டால் எனக்கு இந்த ஆயுள்வேண்டாம், சீக்கிரம் எண்ணைப் பகவான் கூட்டிச் செல்லவேண்டும் என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு சனிபகவான் எட்டில் வைத்து நம்மை ஆட்டிப்படைத்துவிடுவார். சிலர் தங்கள் இறப்புக்காக காத்திருப்பார்கள்.

எட்டாம் பாவத்தை கெட்டது என்று சொல்லும்பொழுது ஒருசில நல்லதும் உண்டு அதாவது அதிர்ஷ்டத்தையும், பணபர ஸ்தானதையும், உழைப்பு இல்லாத ஊதியத்தையும், ஆயுள் காப்பீடு தொகை பெறுவார்கள். ஆனால், அதிர்ஷ்டம் முன் பக்கம் வரும் பின்பு வேறு வழியில்லாமல் ஒரு நொடிப் பொழுதில் அதிர்ஷ்ட கதவு பின்பக்கம் சென்றுவிடும். இது யாருக்கு வேண்டும்.

எட்டு உடன் ஆறு தொடர்பு பெறும்பொழுது திருமணத்தில் சஷ்டாஷக தோஷத்தை ஏற்படுத்தும். அதாவது, சஷ்ட என்றால் ஆறு மற்றும் அஷ்ட என்றால் எட்டு என்று பொருள். அதாவது மணப்பெண்ணின் ராசிக்கும் மணமகனின் ராசிக்கும் ஆறு எட்டாக அமையக்கூடாது (6x8). இந்த தோஷம் உள்ளவர்களை திருமண பொருத்தத்தில் சேர்க்க மாட்டார்கள் 

ஜாதகத்தில் அஷ்டமம் என்றால் எட்டில் உள்ள கோட்சர கிரகங்கள் துன்பத்தை ஏற்படுத்து. இங்கு ரொம்ப பிரச்னை கொடுப்பது ராஜகிரகமாகிய சனியும் குருவும் ஆகும். பிறந்த ராசியிலிருந்து சந்திரன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம் ஆகும். சந்திரன் என்பவர் சிறிது நாட்கள் என்பதால் அஷ்டமம் அவ்வளவு பிரச்னை ஏற்படுத்தாது அன்று நாம் எச்சரிக்கையாய்  இருந்தால் போதுமானது. மற்ற நீண்ட நாட்கள் பிரயாணம் செய்யும் சனியும் குருவும் அதிமிக்க செயல்கள் - அஷ்டம சனியாக அஷ்டம குருவாக இருந்து பிரச்னை கொடுப்பார். மத்திம காலத்தில் அஷ்டம சனி வந்து போனவர்கள் பார்த்தால் தெரியும் அவர்கள் ஒரு பெரு கடலின் மீண்டு நிதானமான நிலையில் அவர்கள் பேச்சு, செயலில் ஒரு தெளிவு, நிதானம் கட்டாயம் இருக்கும். அவர்கள் பேசும்பொழுது எதிரில் நிற்பவர் அவர் நிதானமான பேச்சு கேட்டு நமஸ்காரம் வைத்துவிடுவார் 

எட்டில் உள்ள கிரகங்கள் எவ்வாறெல்லாம் ஆயுள்  கண்டத்தை ஏற்படுத்துவார்கள் என்று பார்ப்போம் 

தீதறும் சென்ம காலையில் எட்டில் 

செங்கதிர் நிற்கிலோ சுரமாம்!

கோதறும் திங்கள் உறில்சல கண்டம்!   

குசனுறில் ஆயுத பீடை!

சோதிசேர் புந்தி வியாதி! பெண் மிருத்யு! 

சுக்கிரன் ஊரில்தரித் திரமாம் 

ஓதிய சனிதா யர்க்குறும் தோடம் !

ஒருவரும் நிற்கஒண் ணாதே! 

        (ஜாதக அலங்காரம் )

இப்பாடலில் ஜென்ம லக்கினத்தில் எட்டாமிடத்தில் சூரியன் நின்றிருந்தால் அந்த ஜாதகன் அடிக்கடி காய்ச்சல் சுட்டால் துன்பப்படுவார். எட்டாமிடத்தில் சந்திரன் அமர்ந்திருந்தால் அவ்வப்போது நீரில் ஆபத்து ஏற்படும். செவ்வாய் வீற்றிருந்தால் கருவிகளால் அல்லது ஆய்தங்களால் கஷ்டங்கள் நேரும், புதன் நின்றால் பல்வேறு நோய்கள் அல்லல்படுத்தும், குரு இருந்தால் அகாலச் சாவு, சுக்கிரன் எனில் வறுமை. சனி எட்டாமிடத்திலிருந்தால் அன்னைக்கு துன்ப துயரங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த எட்டில் ஒரு சூட்சம சக்தி உண்டு. அஷ்டம சக்தி என்பது மனிதனின் உழைப்பு ஆகும். இந்த உழைப்பானது சரியான காலத்தில் வித்திட்டால் அதன் பலன் பன்மடங்காக பலவகையில் நமக்கு திடீர் வருமானமாக கட்டாயம் வரும் அதுவும் உங்களுக்கு நிலைக்கும். உழைப்பில்லா வருமானம் நமக்கு எந்நாளும் நம் வங்கிகளில் தாங்காது என்பது அஷ்டமம் கூறும் சூட்சம பலன் என்பது என் பார்வையில்!

அஷ்டமத்தில் ஏற்படும் அனைத்தையும் நாம் நல்லமுறையில் எடுத்துக் கொண்டு நின்று நிதானமாக நம் செயல்களை ஸ்பீட் பிரேக்கராக நினைத்து பயணம் செய்வோம் வெற்றி பெறுவோம்.

குருவே சரணம்!

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com