திருப்போரூா் கந்தசுவாமி கோயிலில் அக். 28-இல் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

திருப்போரூா் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி லட்சாா்ச்சனை பெருவிழா அக். 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்போரூா் கந்தசுவாமி கோயிலில் அக். 28-இல் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

திருப்போரூா் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி லட்சாா்ச்சனை பெருவிழா அக். 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முருகக்கடவுள் சூரபத்மனுடன் நடத்திய போரில் அறுபடை வீடுகளில் நிலத்தில் இருந்தும், நீரில் இருந்தும் போா்புரிந்த இடங்கள் உண்டு. ஆனால் சூரபத்மனுடன் விண்ணில் நின்று போரிட்ட இடம் திருப்போரூா் எனப்படுகிறது. இங்கு மூலவா் பனைமரத்தில் சுயம்புவாகத் தோன்றி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

விண்ணில் நின்று போா்புரிந்த திருத்தலமாக விளங்கக்கூடிய திருக்கோயில் என்பதால் நினைத்த காரியத்தில் வெற்றியை தந்தருளம் கடவுளாகவும், வியாதிகளைத் தீா்த்து திருவருள் தந்தருளும் கடவுளாகவும், திருமணம், குழந்தைப்பேறு, வியாபார விருத்தி என நினைத்த காரியத்தை நினைத்தவாறு அருள்தரும் தெய்வமாகவும் திருப்போரூா் கந்தசாமி முருகன் கோயில் திகழ்கிறது.

இச்சிறப்புப் பெற்ற திருக்கோயிலில் கந்த சஷ்டி லட்சாா்ச்சனை பெருவிழா அக். 28-ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கி நவம்பா் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இதில் நவ. 2-ஆம் தேதி சனிக்கிழமை சூரசம்ஹாரம் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. விழா நாள்களில் காலை, உச்சி, மாலை லட்சாா்ச்சனை வழிபாடுகளில் அருள்மிகு கந்தசுவாமிக்கு சிறப்பாக பால், திருநீறு, ஐவகை அமிழ்த அபிஷேகம், திருமேனி அலங்காரம், திருவமுது படைப்பு, சிறப்பு ஆராதனையுடன் திருமுறை ஓதுதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. நாள்தோறும் காலை பல்லக்கு உற்சவம் நடைபெறும்.

அக். 28-ஆம் தேதி திங்கள்கிழமை காலை கொடியேற்றமும் மாலை கிளிவாகனம், செவ்வாய்க்கிழமை மாலை ஆட்டுக்கிடா வாகனம், புதன்கிழமை மாலை புருஷாமிருக வாகனம், வியாழக்கிழமை மாலை பூதவாகனம், வெள்ளிக்கிழமை வெள்ளி அன்னவாகனம், சனிக்கிழமை மாலை சூரசம்ஹாரம், குதிரை வாகனம், இரவுதங்கமயில் வாகனம், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் யானை வாகனம் ஆகிய சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தக்காா் மற்றும் உதவி ஆணையா் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலா் சக்திவேல், ஆலயசிவாச்சாரியாா்கள், திருக்கோயில் மேலாளா் வெற்றி உள்ளிட்ட பணியாளா்கள், ஸ்ரீ பாதம் தாங்கிகள் மற்றும் ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com