Enable Javscript for better performance
Weekly Prediction (September 6 - September 12)- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் (செப். 6 - செப். 12) யாருக்கு லாபகரமாக இருக்கும்?

  Published on : 06th September 2019 11:38 AM  |   அ+அ அ-   |    |  

  astrology

  வார பலன்கள் (செப். 6 - செப். 12)

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 6 - செப்டம்பர் 12) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  மகிழ்ச்சி பொங்கும் காலம். தேவையற்ற விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் கொக்குக்கு ஒன்றே மதி என்கிற ரீதியில் நடந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். பயணங்களை மேற்கொண்டு ஆதாயங்களை அடைவீர்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலனை அனுபவிப்பார்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிறு முதலீடுகளைச் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். நீர்ப்பாசன வசதிகளுக்காக செலவுகள் செய்ய நேரிடும்.

  அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும் தொண்டர்களின் ஆதரவும் நன்றாக இருக்கும். 

  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனத்தைச் செலுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். பெற்றோரின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள்.

  பரிகாரம்: “ஜெய துர்க்கா, ஜெய துர்க்கா’ என்று ஜபித்து துர்க்கையை வணங்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 7, 8. 

  சந்திராஷ்டமம்: 6.

  {pagination-pagination}
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  பணம் பலவகையில் உங்களை நாடி வரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இது உகந்த காலமாகும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள்.

  உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வுகளைப் பெறுவர். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். மறைமுகப் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். 

  விவசாயிகள் கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டி, முக்கியப் பிரச்னைகளை சமாளித்து விடுவார்கள். 

  அரசியல்வாதிகள் செய்யும் செயல்களில் வெற்றி பெறுவார்கள். அவர்களின் பெயரும் புகழும் வளரும். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் முக்கிய முடிவுகள் எடுப்பதை இந்த காலகட்டத்தில் தவிர்க்கவும். பெண்மணிகளுக்கு கணவருடன் நல்லுறவு நிலவும். உறவினர்களால் சிறு தொல்லைகள் ஏற்படும். 

  மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றிக் கொடி நாட்டுவார்கள்.

  பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லது. 

  அனுகூலமான தினங்கள்: 6, 10.

  சந்திராஷ்டமம்: 7, 8, 9.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்படலாம். மனதில் சஞ்சலம் தோன்றி அமைதியை இழக்க நேரிடும். தடைகள் எத்தனை வந்திடினும் செய்யும் காரியங்களில் வெற்றி அமையும். சிலர் வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கு ஆளாக நேரிடும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது என்பது அரிதாகும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் வரவு அதிகரிப்பதால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய குத்தகைகள் பெற தகுந்த காலகட்டமாகும். 

  அரசியல்வாதிகளின் செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும். பயணங்களால் பலவகை நன்மைகள் உண்டாகும். புதிய பதவிகளும் தேடி வரும் வாய்ப்பு உண்டு. 

  கலைத்துறையினர் பின்தங்கிய சூழலிலிருந்து விடுபட்டு வேலைகளை புரிந்து செய்வார்கள். பெண்மணிகளுக்கு கணவர் வீட்டாரிடம் ஒற்றுமை நிலவும். முன்பின் அறிமுகமில்லாதவர்களை நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் சிரத்தையுடன் இருக்கவும்.

  பரிகாரம்: சனியன்று சிவபெருமானையும், சனிபகவானையும் தரிசிக்கவும். அனுகூலமான தினங்கள்: 6, 9. சந்திராஷ்டமம்: 10, 11.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  தங்கள் அறிவும் ஆற்றலும் வெளிப்படும். தேவையற்ற உடல் உழைப்புகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பெரிய திருப்பங்கள் ஏதும் ஏற்படாது. உறவினர்களிடம் பாசம் அதிகரிக்கும். கவலைகள் படிப்படியாகக் குறையும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. சக ஊழியர்கள் ஒற்றுமையுடன் உதவுவார்கள். வியாபாரிகள் மனஉறுதியுடன் செயல்பட்டால்தான் வரவேண்டிய பணம் வரும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் உண்டாகும். கூடுதல் விளைச்சலுக்கு வித்திடுவீர்கள்.

  அரசியல்வாதிகள் பேச்சிலும் செயலிலும் கட்டுப்பாட்டை மேற்கொள்வது நலம். மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது சிரத்தையுடன் செய்யவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். 

  பெண்மணிகள் குடும்பத்தினரிடம் அக்கறையாக இருக்கவும். உடல்நலத்திலும் சிறு குறைகள் தோன்றி மறையும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து படிப்பில் அக்கறை செலுத்திப் படிக்கவும்.

  பரிகாரம்: நவக்கிரகப் பிரதட்சணம் செய்யவும். கோளறு பதிகம் படித்து வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 7, 9. 

  சந்திராஷ்டமம்: 12.

  {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  உங்கள் மதிப்பு மரியாதை உயரும். திட்டமிட்ட வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். கௌரவக்குறைச்சலான சூழ்நிலைகள் ஏற்படாமல் தவிர்த்திடுங்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி, நட்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கடுமையாக உழைத்து வருமானம் ஈட்டி முக்கியப் பிரச்னைகளிலிருந்து விடுபடுவார்கள். விவசாயிகள் திருப்திகரமான மகசூலைக் காண்பார்கள். பண வரவால் கடன்களை அடைப்பீர்கள்.

  அரசியல்வாதிகள் மக்களின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்துவைத்து கட்சி மேலிடத்தால் பாராட்டுகள் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கை நழுவிப்போகும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும். பெண்மணிகளைத் தேடி மகிழ்ச்சியான செய்திகள் வரும். கணவருடன் சுமுகமாக நடந்து கொள்வீர்கள். 

  மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முன்னணிக்கு வருவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெற வாய்ப்பு உருவாகும்.

  பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் செந்திலாண்டவரை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 6, 10. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  சற்று தாமதமானாலும் முயற்சிகள் வெற்றி பெறும். அறிவாற்றல் மேம்படும். பொருளாதாரத்தில் உயர்வு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்தே காணப்படும். திட்டமிட்ட வேலைகள் யாவும் இழுப்பறியாக இருக்கும். 

  உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவார்கள். பதவி உயர்வும் பெறுவதற்கான சாத்தியங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு பணவரவு இழுபறியாகத்தான்இருக்கும். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். வாய்க்கால் வரப்பு பிரச்னைளைத் தவிர்ப்பது நல்லது. 

  அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அரசு அதிகாரிகளும் உதவுவார்கள். உங்கள் கொள்கைளில் வீம்பு பிடிக்காமல் இருக்கவும். 

  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எழுத்து, எடிட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டமிது. பெண்மணிகளுக்கு பணவரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கி ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்தவும்.  

  பரிகாரம்:  சனியன்று ஆஞ்சநேயப் பெருமானை தரிசனம் செய்யவும். 

  அனுகூலமான தினங்கள்: 8, 9. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  அளவுக்கு மீறின யோசனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பணவரவு சுமாராகவே இருக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் நன்மையில் முடியும். செயல்களில் முக்கிய திருப்பங்களைக் காண்பீர்கள். சூழ்நிலைகளைப் புரிந்து நடந்து கொள்ளவும்.

  உத்தியோகஸ்தர்கள் வேலைகளைச் சரிவரப் புரிந்து கொண்டு கச்சிதமாக முடிக்கவும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் இருப்பதால் எடுத்த காரியங்கள் பிரச்னையின்றி முடியும். வியாபாரிகளுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லைகள் குறையும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் நன்றாக இருக்கும். மாற்றுப்பயிர்களை உற்பத்தி செய்து லாபம் பெறலாம். 

  அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். கட்சிமேலிடத்தின் உத்தரவை முனைப்புடன் நிறைவேற்றுவார்கள். தொண்டர்களின்ஆதரவு இருக்கும். கலைத்துறையினரின் திறமைக்கு சவால்கள் உண்டாகும். எல்லா விஷயங்களிலும் உங்கள் முத்திரைகளைப் பதிக்க முயற்சிப்பீர்கள். 

  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். கேளிக்கை,  விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

  பரிகாரம்:  புதனன்று பெருமாளை தரிசனம் செய்து வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 6, 11. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களிடத்தில் சற்று எச்சரிக்கை தேவை. பயணத்தில் கவனம் தேவை. எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். மன அமைதிக்கு யோகா, ப்ராணாயாமம் செய்வது நல்லது.

  உத்தியோகஸ்தர்களுக்கு சற்று தொய்வு ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகளை நல்லபடியாக முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் பல யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வார்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும். உழைப்புக்கேற்ற பலன்களைப் பெற நிறைய உழைக்க வேண்டி இருக்கும். 

  அரசியல்வாதிகளின் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். மாற்றுக்கட்சிக் காரர்களும் உங்களை அரவணைத்துச் செல்வார்கள். கலைத்துறையினர் தங்கள் தொழிலில் அபிவிருத்திக் காண்பார்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். பக்குவமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். 

  மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். பெற்றோரின் ஆதரவு குறைந்திருக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

  பரிகாரம்: ஹயக்ரீவரை தரிசனம் செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் சிறந்தது. 

  அனுகூலமான தினங்கள்: 8, 10. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  பொருளாதார நிலையில் முன்னேற்றம் தென்படும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். எதிர்காலத்திற்கான சீரிய முதலீடுகளைச் செய்வீர்கள். குடும்பச் சிக்கல்களைத் தீர்ப்பீர்கள்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். சக ஊழியர்கள் பகைமை பாராட்டுவார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகள் மூலம் வெற்றியடைவார்கள். கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் குறைவாகவே இருக்கும். புதிய குத்தகைகளால் லாபம் கிடைக்காது என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். 

  அரசியல்வாதிகளின் பதவிக்கு ஆபத்துகள் வராது. உங்கள் செயலுக்கு வரவேற்புகள் கிடைக்கும். கட்சி மேலிடத்திடம் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் கவனத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிப்பீர்கள். 

  பெண்மணிகளுக்கு பொருளாதாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் தென்படும். உறவினர்களிடம் நிலவிவந்த மனக்கசப்பு நீங்கும். மாணவமணிகள் விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளவும். 

  பரிகாரம்:  "ஸ்ரீராம ஜெயம்' என்று ஜபித்து வரவும். பைரவரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 7, 12.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  சிறப்புகள் கூடும். எந்தச் செயலிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். எதிரிகளின் பலம் குறையும். வசீகரப் பேச்சின் மூலம் பிறரைக் கவர்வீர்கள். செய்யும் செயல்களைச் சுயநலமில்லாமல் செய்து முடிப்பது நல்லது.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலையிலிருந்த கெடுபிடிகள் குறையும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி விற்பனையை பெருக்குவார்கள். விவசாயிகள் அதிகம் உழைக்க வேண்டி வரும். உடல்நலமில்லாமல் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் அதிக செலவுகளைச் செய்ய நேரிடும். புதிய ஒப்பந்தங்களைத் தள்ளிப்போடவும். 

  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். மாணவ மணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நேரத்தோடு பாடங்களைப் படிப்பது நல்லது. 

  பரிகாரம்:  ஞாயிறன்று பழைமையான சிவன் கோயிலில் வீற்றிருக்கும் சூரியபகவானை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 9, 12. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  வேலையில் சந்தோஷமான சூழல் இருக்காது. தேவையற்ற கற்பனைகளை வளர்த்துக் கொள்வீர்கள். சஞ்சலத்துடனே எதிலும் ஈடுபடுவீர்கள். மனக்குழப்பம் அதிகமாக உள்ள காலகட்டமிது. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தவும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நாட்டமின்மை, அடிக்கடி விடுப்பு எடுத்தல், சக ஊழியர்களுடன் அன்யோன்யம் இன்மை, வேலையில் நிதானம் போன்றவை ஏற்படும். 

  வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் சில அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் இழுப்பறியாகத்தான் முடியும். விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராகவே இருக்கும். அலைச்சல்களுக்குப்பிறகே புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். 

  அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் திரும்பவும் கிடைக்கும். பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். 

  மாணவமணிகள் கவனத்துடன் படித்து நல்ல மதிப்பெண்கள்  பெற்று, கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

  பரிகாரம்:  வெள்ளியன்று ஸ்ரீ ரங்கநாதரை மனதார பிரார்த்தனை செய்யவும். அனுகூலமான தினங்கள்: 11, 12. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். உணவு விஷயங்களில் கவனம் தேவை. குடும்பத்திற்கு நன்மைகளைச் செய்ய முற்படுவீர்கள்.

  உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதில் சிரமங்கள் இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நண்பர்களுக்கு திறமைகள் புரியத் தொடங்கும். புதிய கடைகளைத் திறக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். 

  விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவார்கள். பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும்.

  அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். மேலிடத்திடம் எதிர்பார்த்த பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். தீர ஆலோசித்து புதிய ஒப்பந்தங்கள் செய்யவும். 

  பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கக் காண்பீர்கள்.
  இல்லத்திற்குத் தேவையான பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே செயல்படவும்.

  பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கையம்மனையும் வெள்ளியன்று பெருமாள்} தாயாரையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 12. 

  சந்திராஷ்டமம்: இல்லை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai