விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருப்பத்தூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வியாழக்கிழமை ஊர்வமாக எடுத்துச் செல்லப்பட்டன.
திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம்.
திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம்.


விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருப்பத்தூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வியாழக்கிழமை ஊர்வமாக எடுத்துச் செல்லப்பட்டன.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருப்பத்தூர் நகர பாஜக மற்றும் திலகர் இந்து இளைஞர் மன்றம் சார்பில் 16 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைபெற்றது. 
திருப்பத்தூரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் இல்லங்களில் வழிபட்ட சிலைகள் தருமபுரி மாவட்டம், இருமத்தூரில் உள்ள ஆற்றில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
கோட்டை பிரம்மேஸ்வரர் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், ஹவுஸிங் போர்டு வரை சென்றது. அங்கிருந்து வாகனங்களில் இருமத்தூருக்கு சென்றது. டிஎஸ்பி தங்கவேல் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆம்பூரில்...
ஆம்பூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூரில் கடந்த திங்கள்கிழமை இந்து இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விழா முடிவடைந்த நிலையில், விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் வியாழக்கிழமை ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியிலிருந்து தொடங்கியது.  நகரின் முக்கிய தெருக்கள், சாலைகள் வழியாகச் சென்ற ஊர்வலம் ஆம்பூர் கம்பிக்கொல்லை ஆனைமடுகு தடுப்பணை பகுதியில் நிறைவடைந்தது. 
 தடுப்பணையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணியம், ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
குடியாத்தத்தில்...
 குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயில் அருகில் தொடங்கிய ஊர்வலத்துக்கு, இந்து முன்னணி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். ஆனந்தன் தலைமை வகித்தார். கோட்ட அமைப்பாளர் டி.வி. ராஜேஷ்,  எஸ்.செந்தில்குமார்  ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தனர். 10 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. நெல்லூர்பேட்டை ஏரியில் சிலைகள் கரைக்கப்பட்டன.
ஆற்காட்டில்...
ஆற்காடு நகர , ஒன்றிய இந்து முண்ணனி சார்பில் வைக்கப்பட்டிருந்த 14 பெரிய சிலைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தொடங்கியது. 
வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் ஏ.பி.எஸ்.ஜெகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.மணிகண்டன், நகரத் தலைவர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக வர்த்தக அணி மாவட்டச் செயலர் ஏ.வி.சாரதி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். 
தாஜ்புரா ஏரியில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. 
வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோட்டச் செயலர் எஸ்.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com