திருச்சி உத்தமர் கோயிலில் செப். 11-ம் தேதி குடமுழுக்குப் பெருவிழா

திருச்சி மாவட்டம்,  உத்தமர் கோயிலில் செப்டம்பர் 11-ம் தேதி குடமுழுக்குப் பெருவிழா நடைபெறுகிறது. 
திருச்சி உத்தமர் கோயிலில் செப். 11-ம் தேதி குடமுழுக்குப் பெருவிழா

திருச்சி மாவட்டம்,  உத்தமர் கோயிலில் செப்டம்பர் 11-ம் தேதி குடமுழுக்குப் பெருவிழா நடைபெறுகிறது. 

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் 5-வது தேசமாகவும் சிறப்பு பெற்று விளங்கும் இத்திருக்கோயிலில், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை மேற்கொள்ளும் மும்மூர்த்திகளும் தத்தம் தேவியருடன் காட்சியளிக்கின்றனர். மேலும், பிரம்மாவுக்கு தனி சன்னதி அமைந்திருப்பதும் இக்கோயிலில்தான்.

கடந்த 2003, ஜனவரி 27-ம் தேதி இக்கோயில் குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கின.  பல்வேறு உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இவை அனைத்தும் அண்மையில் நிறைவு பெற்றன.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 11-ம் தேதி  உத்தமர்கோயிலில் குடமுழுக்குப் பெருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்த ஸங்க்ரகணம், நித்யாராதனம், வாஸ்து ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 2,3,4,5-ஆம் கால யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெறஉள்ளன. இதைத் தொடர்ந்து புதன்கிழமை  (செப்டம்பர் 11) காலை 6ஆம் கால யாகசாலை பூஜைகளும், அதைத் தொடர்ந்து பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு, ப்ராண பிரதிஷ்டை ஆகியவை நடைபெறுகின்றன.

இவை நிறைவு பெற்ற பின்னர் விமானங்களுக்கும், கோபுரக் கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி திருக்குடமுழுக்கு பெருவிழா நடத்தப்படுகிறது.  

விழாவில்,  அமைச்சர்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ். வளர்மதி, பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாரிவேந்தர், இந்து சமய அறநிலையத் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

குடமுழுக்கு ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com