Enable Javscript for better performance
Correct punishment for murder in astrology | ஜோதிடத்தில் கொலைக்கு சரியான தண்டனை!- Dinamani

சுடச்சுட

  

  ஜோதிடத்தில் கொலைக்கு சரியான தண்டனை!

  By - ஜோதிட சிரோன்மணி தேவி  |   Published on : 12th September 2019 02:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  astro1

   
  ஜெனன ஜாதகத்தில் தோஷம், யோகம் இல்லாத பிறப்பு இந்த பூவுலகில் யாருமில்லை. எதாவது தோஷம் உள்ளவர்கள் தான் இந்த மண்ணுலகில் ஜெனிக்க முடியும்.  பிரம்மஹத்தி தோஷம் என்பது இந்து முறைப்படி கொலைப்பாவமாக இந்து சமய புராணங்கள் தெரிவிக்கின்றன.

  பிரம்மன் தோற்றுவித்த அனைத்து உயிர்களானது தனது பாவ புண்ணிய கணக்குகளுக்கு தக்கவாறு மரணம் சம்பவிக்கும். அவ்வாறன்றி கடவுளின் சட்டத்திற்கு மாறாக  எதாவது காரணத்திற்காகவோ இந்த லோகத்தில் தவறாக கொலை செய்யப்பட்டால் இந்த தோஷம்  கொலை செய்தவரை பற்றிக்கொள்ளும். அதுதவிர முன்னோர்கள் செய்த  தோஷம் அவர்கள்  தலைமுறைகளைத் தொடர்ந்து வரும் என்பது உண்மை. 

  பிரம்ம தோஷத்தின் பொருள் "பிரம்மம்" என்றால் பிரமத்தினை உணர்ந்தவர்கள் + ஹத்தி' என்றால் 'மாய்த்தல்' என்று பொருள். இந்த பிரபஞ்சத்தில் பிரம்ம கடவுளால்  படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கு தெரிந்தோ தெரியாமலேயோ யாரெல்லாம் மனத்தேயோ அல்லது உயிரையோ கொன்றுவிட்டாள் இந்த தோஷம் நம்மை  ஆட்டிப்படைக்கும்.  இந்த தோஷம் சூட்சமாக பார்த்தால் பல காரணங்களால் வருகிறது. அதாவது  பிரமத்தினை உணர்ந்தவர்களுக்கு பழித்து பேசினாலோ, இறப்புக்கு சமமான  துன்பம் கொடுத்தாலோ, மண்ணில் பிறந்த உயிரை வதம் செய்தலோ, குருவை மதிக்காதவர்கள், குருவுக்கு தட்சிணை தராமல் ஏமாற்றினாலோ, சொத்துக்காக அழித்தலோ,  பெற்றோருக்கு உணவு கொடுக்காமல் இருந்தாலோ, பசுவை வதைத்தாலோ, காமத்துக்காகப் பெண்களை துன்பப்படுத்தினால், அதிலும் முக்கியமாக கடவுளின் நாமாவளிகளை உச்சரிக்கும் பிராமணர்களை சபித்தாலோ, வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பை கொன்றாலோ, சாமி சிலையை திருடினாலோ இந்த தோஷம் அவர்களை பற்றிக்கொள்ளும்  என்பது ஜோதிட கூற்று.  

  இந்த தோஷத்தால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று பார்ப்போம். ஒருவருக்கு என்ன தான் வழிபாடுகள் செய்தாலும் மனது சரியாக இருக்காது. நல்ல தசா புத்திகள்  இருந்தாலும் வீட்டில் எதாவது பிரச்னை மற்றும் துன்பம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு சிறு பிராணி தெரியாமல் நம் வாகனத்தில் அடிபட்டால் நமக்கு எவ்வளவு  மனப்பாதிப்பு இருக்குமோ அவ்வளவு பாதிப்பு இருக்கும். அதுதவிர வீட்டில் குடும்பத்தில் ஒற்றுமை குறையும், திருமணம் தடங்கல் ஏற்படும், வீட்டில் உள்ளவர்கள் பாதி  நாட்கள் வைத்தியரின் வாசலில் இருப்பார்கள், மனக்குழப்பம் இருந்துகொண்டு இருக்கும், வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. காசு வரவேண்டியது வராமல்  இழுபறியாக இருக்கும், செல்வம் தாங்காது, கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். படிப்பு மண்டையில் ஏறாது, தொழிலில் உரிய உயர்வு கிட்டாது, குழந்தை செல்வம்  இருக்காது என்று அடுக்கிக் கொண்டு போகலாம்.

  இந்த தோஷம் மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் இதே சட்டம் தான் என்பதற்கு எடுத்துக்காட்டு நம் இதிகாசங்கள் தான் முன்னுதாரணம். ராவணனைக் கொன்றதால்  ஸ்ரீராமருக்கும், பிரம்மனின் தலையைக் கொய்த பைரவருக்கும், மகிசாசுரன் அரக்கனை வதம் செய்ததால் சப்தகன்னியருக்கும் பிரம்மஹத்தி தோஷம் பெற்றார்கள். அரசாட்சி  புரிந்த வீரசேனன், வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் இந்த தோசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நிறைய ஹத்தி தோஷங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நம் ஸ்ரீ்ராமருக்கும் கூட பிரம்ம ஹத்தி, சாயாஹத்தி, வீரஹத்தி போன்ற தோஷங்களும் மற்றும் நரகாசுரனைக் கொன்றதால், விஷ்ணுவுக்கு வீரஹத்தி தோஷம்  ஏற்பட்டது. பிரம்மஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் பல்வேறு முறைகளில் கணிக்கப்படுகிறது அதிலும் சூட்சமம் அடங்கி உள்ளது. அந்தணர் என்று சொல்லப்படும்  குருவுடன் சனி சேர்ந்தால் 5 பாகைக்குள் சேர்ந்தோ, சமசப்தம பார்வை பெற்றாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ அல்லது குரு சாரத்தில் சனியோ சனி சாரத்தில் குருவோ  அமர்ந்தாலோ இந்த தோஷம் ஏற்படும். குருவும் சனியும் சேர்ந்தால் குருசண்டாளயோகம் என்று கூறும்பொழுது இது என்ன தோஷம் என்று கேள்வி எழும். 

  ஒரு யோகம் என்றால் ஒரு தோஷம் உண்டு (fluctuation) உண்டு. அதிலும் குரு பலமிழந்து சனி பலம் பெற்று இருந்தால் பூர்வபல குறைபாடுதான். இந்த தோஷம்  இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். பிறந்த ஜாதகத்தில் ராசி மற்றும் நவாம்சத்தில் குரு சனி இணைந்து இருந்தால் பிரம்மஹத்தி தோஷமானது இன்னும் வலு பெரும் .  முக்கியமாக இந்த தோஷம் இந்த அமைப்பு ஜாதகரை குருதசை, சனி புக்தி காலத்திலோ அல்லது சனிதசை, குருபுக்தி கால கட்டத்திலோ தொடர்பு கொண்டு பிரச்னையை  ஏற்படுத்தும்.
   
  தீர்வு (Prescription)

  புனித ஸ்தலங்களான இராமேஸ்வரம், தேவிப்பட்டினம், காசி, கயா, கங்கை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் நீராடி, இறைவனை வணங்கி வழிப்பட வேண்டும். அது தவிர  மற்றும் சில கோவில்களான திருவிடைமருதூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, திருவாஞ்சியம், பிரம்மதேசம், மேல்மலையனூர், திருப்பட்டூர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார்-  ஸ்ரீரங்கம், உத்தமர் கோயில்-திருச்சி போன்ற கோவில்களில் முக்கிய தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது.

  ஸ்ரீராம்பிரானே சிவ பெருமானை பூஜை செய்து  பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக் கொண்டார் என்பதைப் புராணம் கூறுகிறது. இதற்கு முதல் பரிகாரம் என்று  சொல்லவேண்டுமானால் கர்மவினைகளை அழிக்கும் ருத்ரன் குடிகொள்ளும் பழம்பெரும் சிவன் தலத்தில் அங்குள்ள சுற்றியுள்ள துணை சந்நிதிக்கும், ஐந்து கூட்டு  எண்ணெய் (விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய்) தீபம் ஏற்ற வேண்டும். பின்பு மூலவருக்கு அர்ச்சனை செய்யவேண்டும்.

  இதற்கு எனக்கு அதிக செலவாகும் என்னும் பணமில்லாதவர்களுக்கு; அமாவாசை அன்று சுத்தமாக குளித்து அதிகாலை நேரத்தில் சிவன் சந்நிதிக்கு சென்று ஒன்பதுமுறை  சுற்றி மனதார வேண்டிக்கொள்ளலாம். பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. அவற்றில் சரியான முகம் கொண்ட  ருத்ராட்சம் அணியலாம். அல்லது திருமாலை உள்ளே அடக்கிய சாளக்கிராமக்களை தினமும் வீட்டில்பூஜை செய்து வழிப்பட வேண்டும் .

  இந்த தோஷம் கொலை என்பது ஒரு காரணி அது நல்லது  கெட்டது என்று பிரித்துப் பார்க்காமல் அதற்கான இந்த தோஷ தண்டனையை கடவுளால் கொடுக்கப்படும். பரிகாரம்  செய்துவிடலாம் பின்பு தொடரலாம் என்று நினைத்துத் தவறு செய்யக்கூடாது. நாம் செய்யும் அனைத்தையும் கடவுளின் தான் நேத்திரம் மூலம் சிடிவ் கேமராவில் பார்த்துக்  கொண்டு இருக்கிறார் அதிலிருந்து நாம் தப்பவே முடியாது.  

  குருவே சரணம்  

  - ஜோதிட சிரோன்மணி தேவி

  Whats app: 8939115647
  Email: vaideeshwra2013@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai