Enable Javscript for better performance
Weekly Prediction (Sep.13 - Sep.19) | இந்த வாரம் திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு?- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் (செப்.13 - செப்.19) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு?

  Published on : 13th September 2019 12:36 PM  |   அ+அ அ-   |    |  

  astrology

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 6 - செப்டம்பர் 12) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தையும் குறித்த காலத்திற்குள் செய்து முடிப்பீர்கள்.  ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிகச் சுற்றுலா செல்வீர்கள். 

  உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்புகள் நீங்கி, கரிசனத்துடன் நடந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கொடுக்கல்  வாங்கல்கள் சீராக முடியும். முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். விவசாயிகளுக்கு கொள் முதல் லாபம் அதிகரிக்கும். சக உழைப்பாளிகளை தட்டிக்  கொடுத்து அரவணைத்துச் செல்லவும். 

  அரசியல்வாதிகளுக்கு வருமானம் பல வழிகளிலும் தேடி வரும். கட்சியில் மதிப்பு, மரியாதை உயரும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பொருளாதாரம்  மேம்படும். 

  பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். உற்றார் உறவினர்களிடம் சுமுகமாக பழகவும். மாணவமணிகள் வருங்காலத்திற்காக செய்யும்  பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். உடற்பயிற்சிகள் மேற்கொள்ளவும். 

  பரிகாரம்:  ராகு காலத்தில் துர்க்கையை விளக்கேற்றி பூஜிக்கவும். அனுகூலமான தினங்கள்: 13, 14. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  மனதிலிருந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தேக ஆரோக்கியம் சீராக  இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். 

  உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வுகள் வாங்க வழி பிறக்கும். வியாபாரிகள் புதிய  முதலீடுகளைத் தவிர்ப்பது நலம். கூட்டாளிகள் அனுகூலமாக இருப்பார்கள். விவசாயிகள் கவனத்துடன் இருக்கவும். கால்நடைகளால் லாபம் அடைவீர்கள். 

  அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருப்பதால் காரியங்கள் அனைத்தும் சுலபமாக முடிவடையும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். கலைத்துறையினரின்  திறமைகள் கோலோச்சும். சக கலைஞர்கள் நட்புடன் நடந்து கொள்வார்கள். 

  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்தவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். வெளிவிஷயங்களில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
   
  பரிகாரம்: கிருஷ்ணபகவானை வழிபட்டு அருளைக் கூட்டவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 15. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  உங்களின் உயர்ந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். குடும்பச் சூழ்நிலையில் புதிய மாற்றங்கள் தென்படும். வாகனச் சவாரியில் கவனம் தேவை. வேலைத்  தொந்தரவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு பண நெருக்கடி இருக்காது. சக ஊழியர்களின் ஆதரவு குறையும். கொடுத்த வேலைகளை மனம் சலிப்படையாமல் செய்யவும். வியாபாரிகள்  வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். முயற்சிகள் யாவும் பெரும்பாலும் வெற்றியடையும். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.  உடல்நலம் சற்று பாதிக்கப்படலாம்.

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் அரிய சாதனைகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் சில சில்லரைச்  செலவுகள் செய்ய நேரிடும். சக கலைஞர்களே புதிய வாய்ப்புகளைத் தேடித் தருவர். பெண்மணிகள் நிதானத்துடன் செயல்படவும். எதிலும் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் பிரச்னைகள் தீரும். 

  மாணவமணிகளின் கல்வியில் சிறு இடைஞ்சல்கள் ஏற்படும். ஆகவே கவனத்துடன் கடும் முயற்சி செய்து படிக்கவும்.

  பரிகாரம்: ஆஞ்சநேயர் சுலோகம் ஜபித்து தரிசனம் செய்யவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 15.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  சுபகாரியங்கள் கைகூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வழக்கு விஷயங்கள் நல்லபடியாக முடியும். தெய்வ வழிபாடுகளில்  மனம் ஈடுபடும். மனக்கவலைகள்  குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். பெயர், புகழ் பெறுவீர்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி ஏற்படும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம்.  

  வியாபாரிகள் கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டி, முக்கியப் பிரச்னைகளைச்சமாளித்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூலில் ஓரளவு லாபம் கிடைக்கும். புதிய  தானியங்களைப் பயிரிட்டுப் பலன் அடையலாம். 

  அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்குக்கு ஆளாகலாம். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினர் கடின முயற்சிக்குப் பின் புதிய  ஒப்பந்தங்கள் பெறுவர். பணவரவு சரளமாக இருக்கும். 

  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். உடல் நலம், மன நலம் இரண்டும் சிறப்பாக அமையும்.  மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள்.

  பரிகாரம்: புதனன்று கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசிக்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 15, 16. 

  சந்திராஷ்டமம்: 13, 14.

  {pagination-pagination}

  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  ஆன்மிகச் சிந்தனைகளால் மனம் உற்சாகம் அடையும். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் குறைந்தே காணப்படும். அநாவசியமான பயணங்களைத் தவிர்க்கவும். அலை
  பாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். சற்று செலவுகளும் அதிகரிக்கும். 

  உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் பணவரவுக்கு என்னவோ குறைவு இருக்காது. வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள்  வருவார்கள். இருப்பினும் வரவு செலவு விஷயங்களில் கவனத்துடன்  இருக்கவும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப்பயிர்களைப் பயிர் செய்வதன்  மூலம் மேலும் லாபத்தை அள்ளலாம்.

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலங்களில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். கலைத்துறையினரின்  திறமைகளை மற்றவர்கள் பாராட்டுவார்கள். ஒப்பந்தங்களும் லாபகரமாகவே முடியும். பெண்மணிகள் பணவரவு சீராக இருப்பதால் ஆடம்பரப் பொருள்களை வாங்குவார்கள்.  மாணவமணிகள் கல்வியில் முன்கூட்டியே அக்கறை காட்டினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளலாம்.

  பரிகாரம்: வெள்ளி, செவ்வாய், பௌர்ணமியில் அம்பாளை மலர் கொண்டு பூஜிக்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 17. 

  சந்திராஷ்டமம்: 15, 16.

  {pagination-pagination}

  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  குடும்ப அந்தஸ்து உயரும். மற்றபடி நெருங்கியவர்களுடன் விரோதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்கவும்.  பணப்புழக்கம் சுமாராகவே இருக்கும். புதிய கடன்களை வாங்க நேரிடலாம்.

  உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். ஆதலால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.  

  வியாபாரிகள் தங்கள் முயற்சிக்குத் தகுந்த லாபத்தைப் பெறுவர். புதிய முதலீடுகளில் எச்சரிக்கைத் தேவை. விவசாயிகள் கடுமையாக உழைத்து நல்ல மகசூலைக்  காண்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 

  அரசியல்வாதிகளின் செயல்கள் ஈடேற சிரமங்கள் உண்டாகும். சிறிய வெற்றிகளே உங்களைச் சமாதானப் படுத்தும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் பணிபுரிவர்.  சிரமங்களுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். 

  பெண்மணிகள் குடும்பத்தினரிடம் ஒற்றுமையுடன் நடந்து கொண்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.  மாணவமணிகளுக்கு பெற்றோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். படிப்பில் அக்கறை செலுத்தவும்.

  பரிகாரம்: காகத்திற்கு அன்னமிட்டும் குலதெய்வ வழிபாடு செய்தும் சிரமங்களை குறைக்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 16. 

  சந்திராஷ்டமம்:  17, 18, 19.

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். உடல்நலம் பாதிக்கப்பட்டு   மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடலாம். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும்.

  உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்தியாக முடிப்பர். வருமானமும் படிப்படியாக வளரும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். வியாபாரிகளுக்கு  கொடுக்கல் வாங்கல்கள் சீராக முடியும். வாடிக்கையாளர்களை கனிவான பேச்சு, நடத்தையால் கவருவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சலும் விற்பனையும் அமோகமாக  இருக்கும். 

  அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிக்கு ஏற்ற பொறுப்புகளைப் பெறுவர். தொண்டர்களை அரவணைத்துச் சென்றால் மேலும் நன்மை அடையலாம். கலைத்துறையினர்  திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். பணவரவும் சீராகவே இருக்கும். 

  பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். சேமிப்பு விஷயங்களில் கவனம்  செலுத்தவும். மாணவமணிகள் கல்வியில் வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடவும். தேர்வில் வெற்றி பெற முயற்சி பயிற்சி தேவை.

  பரிகாரம்: பார்வதி} பரமேஸ்வரரையும் முருகப்பெருமானையும் வணங்கவும்.

  அனுகூலமான தினங்கள்: 16, 17. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  தொழிலில் ஏற்றங்கள் உண்டானாலும் சில தடைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும். சுணக்கம் கூடும்.  குடும்பத்தில் ஒற்றுமை குறையும்.  பணவரவு நன்றாக இருக்கும். எவரையும் அலட்சியம் செய்யாதீர்கள்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மாற்றங்களைக் காண்பீர்கள். மேலதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள்  சுமுகமாகவே முடியும். நண்பர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாகவே இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும்.

  அரசியல்வாதிகளின் ரகசியங்களை எதிரிகள் தெரிந்து கொள்வார்கள். எவரிடமும் வெளிப்படையாகப் பேச வேண்டாம். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய  ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பணவரவு இருக்கும். 

  பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகளுக்கு பெற்றோர், சகோதரர்களால் நன்மை உண்டாகும். விளையாட்டில் சாதுர்யத்துடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

  பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 15, 19. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  பெரும்பாலான பிரச்னைகளில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம்  தேவை. தந்தை வழி சொத்துகளில் சிறு வில்லங்கம் உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வர். பணவரவு இரட்டிப்பாக அமையும். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். கூட்டாளிகளை  அரவணைத்துச் செல்லவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்தவும்.

  அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான்  நற்பலனை அடைய முடியும். உங்கள் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். 

  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாக இருப்பர். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகளின் சிறிய முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். சிறிய உடற்பயிற்சிகள் மேற்கொண்டு மன உற்சாகம் பெறுங்கள்.

  பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 18, 19. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  அந்தஸ்து, கௌரவம் உயரும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அடுத்தவர்களுக்கு வாக்கு கொடுப்பதோ, முன் ஜாமீன் போடுவதோ கூடாது. பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம். 

  உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். அதிகமாக உழைத்து இரட்டிப்பு லாபத்தையும் அடைவீர்கள். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றம்  அடைவர். நண்பர்கள் சொல் கேட்டு நடப்பார்கள். கடன் வாங்காதீர்கள். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அனைத்தும்  வசூலாகி, பொருளாதார நிலைமை சீரடையும்.

  அரசியல்வாதிகளின்  செயல்பாடுகளில் கட்சி மேலிடம் திருப்தியடையும். உங்கள் திறமையும் பளிச்சிடும். முக்கிய பயணங்கள் மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர்  மனதிற்கு இனிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ரசிகர்களை உற்சாகப்படுத்துவீர்கள். 

  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் சந்தோஷம்  கிடைக்கும். மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தபடி கல்வியில் முன்னேறுவீர்கள்.

  பரிகாரம்:  துர்க்கையையும் விநாயகரையும் வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 17. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  சந்தோஷமளிக்கும் செய்திகளைக் கேட்பீர்கள். நம்பிக்கையுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மனதில் நிலவிய குழப்பங்கள் அகலும். திட்டமிட்ட வேலைகளில் உறுதியுடன்  வெற்றி பெறுவீர்கள். பேச்சில் உஷ்ணத்தைக் குறைக்கவும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரிகள் எதிர்பார்த்த  வருமானத்தைப் பெறுவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி வருமானத்தைப் பெருக்க நினைப்பர்.

  விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கால்நடைகளால் கூடுதல் லாபம் உண்டாகும்.

  அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உட்கட்சிப் பூசலால் மனம் வருந்த நேரிடும். கட்சி மேலிடத்தில் உங்கள் மீது அபவாதமும் ஏற்படலாம். கலைத்துறையினர்  பல தடைகளைத்தாண்டி, புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

  பெண்மணிகள் கணவரிடம் நேசத்துடன் பழகவும். பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

  பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள். 

  அனுகூலமான தினங்கள்: 15, 18. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய) 

  திட்டமிட்டபடி காரியங்களில் படிப்படியாக வெற்றிகளை அடைவீர்கள். சுபச்செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்களும் நண்பர்களும் அனுசரணையாக  இருப்பார்கள். உடலிலும் மனதிலும் இருந்த சோர்வுகள் அகலும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும்  உதவி செய்வார்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு  கொடுக்கல் வாங்கல்கள் நலமாக முடியும். புதிய யுக்திகளை வியாபாரத்தில் புகுத்த நினைப்பீர்கள். விவசாயிகள் வயல்வரப்பு சண்டைகளில் முடிவைக் காண்பார்கள்.  கால்நடைகளால் பலனுண்டு.

  அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். பெயர், புகழ் உயரும். கலைத்துறையினர் பல  தடைகளைத்தாண்டி, புதிய ஒப்பந்தங்களைச் செய்வர். வருமானம் குறைவாகவே காணப்படும். 

  பெண்மணிகளின் உடல்நலம் பாதிக்கப்படலாம். கணவருடனான பிரச்னைகளைத் தவிர்க்கவும். மாணவமணிகளின் மதிப்பெண்கள் குறையும். முயற்சிகளை கைவிட வேண்டாம்.

  பரிகாரம்: சனிபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் ஒருசேர வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 18, 19. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.


   

  kattana sevai