அவர் நம்முள் தான் இருக்கிறார்!

இந்த உலகில் கடவுளை வணங்க நேரம் இல்லை. ஆனால் அவரின் திருவருள் மட்டும் வேண்டும்
அவர் நம்முள் தான் இருக்கிறார்!

இது இயந்திர உலகம். எங்கும் அவசரம். எதிலும் அவசரம்..

இந்த உலகில் கடவுளை வணங்க நேரம் இல்லை. ஆனால் அவரின் திருவருள் மட்டும் வேண்டும் என்று கேட்பவர்கள் நிறையப் பேர் உள்ளனர். சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்காமல் இருக்கிறோமா? உறங்குவதற்கு நேரம் ஒதுக்காமல் இருக்கிறோமா? குளிக்க நேரம் ஒதுக்காமல் இருக்கிறோமா?

இதற்கெல்லாம் நேரம் ஒதுக்கும் நாம் நம்முள் இருக்கும், நம்மை வழிநடத்திச் செல்லும் இறைவனை வணங்குவதற்கு நேரம் இல்லை என்கிறோம்.

சரி, இறைவன் மாபெரும் சக்தி. அவரை நேரம் ஒதுக்கித்தான் வழிபட வேண்டும் என அவர் நினைப்பதில்லை. அவர் நம்முள் இருக்கிறார்.

அவர்தான் நம்மை வழிநடத்திச் செல்கிறார் என்ற நினைவுடன் ஒவ்வொரு செயலையும் செய்யவேண்டும். அப்படிச் செய்ய ஆரம்பித்தால் அனைத்தும் நாம் தான் செய்கிறோம். எல்லாம் என்னால் தான் நடக்கிறது என்ற அகங்காரம் விலகி, இறைவனின் கருணை கிடைத்து விடும். ஒன்பது வகை இறைவனின் வழிபாட்டில் நினைப்பு (ஸமரணம்) சிறந்த வழிபாடாகும்.

ஓம் நமச்சிவாய...

ஆன்மீக வாழ்வுக்குப் பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆன்மீக பாரதத்தை உருவாக்குவோம்.....!

தொகுப்பு - கோவை ச.பாலகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com