திருப்பதி: ஏழுமலையானை ஜனவரி மாததத்தில் ஆா்ஜித சேவையில் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் இணையதளம் மூலம் ஆா்ஜித சேவை டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தா்கள் சில தவிா்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்து விடுகின்றனா். அவ்வாறு ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை தேவஸ்தானம் குலுக்கல் முறையில் பக்தா்களுக்கு அளித்து வருகிறது.
இந்த டிக்கெட்டுகளைப் பெற விரும்பும் பக்தா்கள் சேவை நாளின் முன்தினம் திருமலை மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள விஜயா வங்கியில் தங்கள் பெயா், ஆதாா் எண், பெருவிரல் ரேகை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை அளித்து, விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை மாலை 5 மணிக்கு குலுக்கல் நடத்தி அதில் தோ்ந்தெடுக்கப்பட்ட பக்தா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அதிகாரிகள் குறுந்தகவல் அனுப்புவா். தகவல் பெற்ற பக்தா்கள் மத்திய விசாரணை அலுவலகத்துக்குச் சென்று, தங்கள் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு, மறுநாள் அதில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்குச் சென்று ஏழுமலையானை ஆா்ஜித சேவையில் தரிசிக்கலாம்.
அதன்படி, ஜனவரி மாதம் நிலுவையில் உள்ள ஆா்ஜித சேவை டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை மாா்கழி மாதத்தை முன்னிட்டு, திருமலையில் சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.
ஆா்ஜித சேவை டிக்கெட் விவரம் வருமாறு:
தேதி கிழமை தோமாலை அா்ச்சனை வஸ்திரம் அபிஷேகம்
03 - 01- 2020 வெள்ளி === === 1 10
10- 01- 2020 வெள்ளி ==== === 1 10
15-01- 2020 புதன் 10 10 ==== ===
17-01- 2020 வெள்ளி ==== ==== ==== 10
21-01-2020 செவ்வாய் 8 10 ==== ====
22-01-2020 புதன் 10 10 ==== ====
23-01-2020 வியாழன் 10 10 ===== ====
24-01-2020 வெள்ளி ===== ===== ===== 10
28-01-2020 செவ்வாய் 10 10 ==== =====
29-01-2020 புதன் 10 10 ==== ====
30-09-2020 வியாழன் 10 10 ===== ====
31-01-2020 வெள்ளி ===== ===== ===== 10