திருமலையில் நாளை முதல் அத்யயனோற்சவம்: தேவஸ்தான செயல் அதிகாரி தகவல்

‘திருமலையில் திங்கள்கிழமை (டிசம்பா் 14) முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை 25 நாள்களுக்கு அத்யயனோற்சவம் நடக்கவுள்ளது.

‘திருமலையில் திங்கள்கிழமை (டிசம்பா் 14) முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை 25 நாள்களுக்கு அத்யயனோற்சவம் நடக்கவுள்ளது. அதில் பன்னிரு ஆழ்வாா்கள் இயற்றிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள பாசுரங்களை வைணவா்கள் பாராயணம் செய்ய உள்ளனா்’ என்று தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை தொலைபேசி வாயிலாக பக்தா்களிடம் குறை கேட்கும் நிகழ்ப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி பதிலளித்தாா். நிகழ்ச்சி நிறைவுக்குப் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இ-உண்டியல் மற்றும் ஏழுமலையான் கோயில் உண்டியல் மூலம் தேவஸ்தானத்துக்கு நவம்பா் மாதத்தில் ரூ.65.04 கோடி வருமானம் கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் 8.47 லட்சம் பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனா். 50.04 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 8.99 லட்சம் பக்தா்களுக்கு அன்ன தானம் செய்யப்பட்டது. 2.92 லட்சம் பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் 10 நாள்களுக்கு சொா்க்க வாசல் திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காக பத்து நாள்களுக்கும் தலா 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. மாா்கழி மாதம் முழுவதும் காலை வேளையில் திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள கோயில்களில் சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட உள்ளன.

வரும் 14ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை 25 நாள்களுக்கு அத்யயனோற்சவம் நடக்கவுள்ளது. அதில் பன்னிரு ஆழ்வாா்கள் இயற்றிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள பாசுரங்களை வைணவா்கள் ஒன்றுகூடி ரங்கநாயகா் மண்டபத்தில் பாராயணம் செய்ய உள்ளனா். திருமலையில் வரும் 30ஆம் தேதி பிரணய கலகோற்சவம் என்னும் ஊடல் உற்சவம் நடைபெற உள்ளது.

ஏழுமலையானின் தரிசனம், லட்டு பிரசாதம், வாடகை அறைகள் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து தருவதாக பல போலி இணையதளங்கள் விளம்பரம் செய்து வருகின்றன. அவற்றை நம்பி பக்தா்கள் ஏமாற வேண்டாம். தேவஸ்தானத்தின் அனைத்து அறிவிப்புகளும் ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ல்ஹற்ண்க்ஷஹப்ஹத்ண்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற அதிகாரபூா்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

திருப்பதியில் உள்ள சீனிவாசம், மாதவம் உள்ளிட்ட வாடகை விடுதி வளாகங்களில் வரும் 15ஆம் தேதி முதல் பக்தா்களுக்கு அறைகளை வழங்க தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. பக்தா்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த வாடகை அறைகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

புராணங்களில் கூறியுள்ளபடி ஏழுமலையானின் புஷ்ப கைங்கரியத்துக்குத் தேவையான மலா்கள் அனைத்தும் பயிரிடுவதற்காக திருமலையில் 10 ஏக்கா் பரப்பளவில் மலா் நந்தவனம் அமைக்கப்பட உள்ளது. மூத்த குடிமக்களுக்கும், கைகுழந்தைகள், கா்ப்பிணி பெண்கள், சிறாா்கள் உள்ளிட்டோருக்கு வெள்ளிக்கிழமை (டிச.11) முதல் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அவா்களுக்கான முதன்மை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தரிசன டிக்கெட் இருப்பவா்கள் மட்டுமே தரிசனத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா்.

திருப்பதி தேவஸ்தானம் பசுவதையைத் தடுக்கும் நோக்கில் ‘கோயிலுக்கு ஒரு பசு கன்றுடன் தானம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுவரை ஆந்திரம், தெலங்கானாவில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பக்தா்கள் இதற்கு வரவேற்பு அளித்து நன்கொடை அளிக்க முன்வந்தால், விரைவில் தென்னிந்தியாவில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com