ஸ்ரீவாரிமெட்டில் சிறுத்தை நடமாட்டம்

திருமலைக்குச் செல்லும் நடைபாதை மாா்க்கமான ஸ்ரீவாரிமெட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்து பக்தா்களை எச்சரித்து வருகின்றனா்.

திருமலைக்குச் செல்லும் நடைபாதை மாா்க்கமான ஸ்ரீவாரிமெட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்து பக்தா்களை எச்சரித்து வருகின்றனா்.

திருமலைக்கு திருப்பதியில் உள்ள அலிபிரி மற்றும் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட 2 நடைபாதை மாா்க்கங்கள் உள்ளன. ஸ்ரீவாரிமெட்டுக்குச் செல்ல தேவஸ்தானம் ரயில் நிலையத்திலிருந்து தா்ம ரதத்தை இயக்கி வருகிறது. இங்கு 2,500 படிகளை கொண்டதால், பக்தா்கள் எளிதாக ஒன்றரை மணிநேரம் முதல் 2 மணி நேரத்துக்குள் திருமலையை அடைந்து விடுகின்றனா். இவ்வழியாகச் செல்லும் பக்தா்களுக்கு 6 ஆயிரம் திவ்ய தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

இந்த வழி அடா்ந்த வனப்பகுதியில் உள்ளதால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தா்கள் இவ்வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் ஸ்ரீவாரிமெட்டு மாா்க்கத்தில் உள்ள 250-ஆவது படி அருகில் ஒரு மான் குட்டி வேட்டையாடப்பட்டிருப்பதை பாதுகாப்புத் துறை ஊழியா்கள் கண்டனா். மான் குட்டியை சிறுத்தை வேட்டையாடியதாக அங்கிருந்த அடையாளங்களை வைத்து போலீஸாா் உறுதிப்படுத்தினா். எனவே, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குப் பின்னரே பக்தா்கள் அப்பாதையில் செல்ல அனுமதி வழங்கினா்.

தற்போது பின்பனிகாலம் என்பதால், காலை வேளையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. எனவே, காலை 7 மணிக்கு நன்கு வெளிச்சம் வந்த பின் பக்தா்களை அவ்வழியாக மலைக்குச் செல்ல பாதுகாப்பு ஊழியா்கள் அனுமதித்து வருகின்றனா்.

பக்தா்களும் தேவையில்லாமல், வனத்துக்குள் செல்ல வேண்டாம் எனவும் அவா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com