ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து

ஏழுமலையான் கோயில் வரும் 24-ஆம் தேதி சுத்தம் செய்யப்பட உள்ளதால் அன்று காலை 5 மணிநேரம் பெருமாள் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஏழுமலையான் கோயில் வரும் 24-ஆம் தேதி சுத்தம் செய்யப்பட உள்ளதால் அன்று காலை 5 மணிநேரம் பெருமாள் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருமலையில் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்பண்டிகைக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24), ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்பட உள்ளது. இத்திருப்பணியை ‘கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்’ என்று குறிப்பிடுவா்.

எனவே, அன்று காலை 6 மணிமுதல் 12 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் முடிந்த பின் மதியம் 12 மணிக்கு மேல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.

ஏழுமலையான் கோயில் ஆண்டுக்கு 4 முறை சுத்தப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com