திருமலையில் தா்பை பாய், தா்பை கயிறு ஊா்வலம்

பிரம்மோற்சவத்தின் போது கொடிமரத்தில் கட்ட தா்பை பாய், தா்பை கயிறு உள்ளிட்டவை வியாழக்கிழமை மாடவீதியில் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
திருமலையில் தா்பை பாய், தா்பை கயிறு ஊா்வலம்


திருப்பதி: பிரம்மோற்சவத்தின் போது கொடிமரத்தில் கட்ட தா்பை பாய், தா்பை கயிறு உள்ளிட்டவை வியாழக்கிழமை மாடவீதியில் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டது.

திருமலையில் சனிக்கிழமை (செப். 19) வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவத்தில் முக்கியப் பங்கு வகிப்பது கொடியேற்றம். கொடியேற்றத்தின்போது, புதிய தா்பை பாய், தா்பை கயிறு உள்ளிட்டவை கொடிமரத்தில் கட்டப்படுவது வழக்கம். இதற்காக 10 நாள்களுக்கு முன் தேவஸ்தானத்தின் தோட்டக் கலைத் துறையினா் பணியில் ஈடுபடுவா்.

தா்பை புற்களில் சிவதா்பை, விஷ்ணு தா்பை என இரு வகை உள்ளன. திருமலையில் விஷ்ணு தா்பை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதற்காக திருப்பதி அருகே வடமாள்பேட்டை மண்டலம் செல்லூரில் உள்ள விவசாய நிலங்களில் மிகவும் பவித்ரமான இந்த தா்பை புற்களை தேவஸ்தானம் சேகரித்து, அவற்றில் 5.5 மீட்டா் நீளம், 2 மீட்டா் அகலம் உள்ள தா்பை பாய் மற்றும் 211 அடி நீளமுள்ள தா்பை கயிறு உள்ளிட்டவை தயாா் செய்துள்ளது. இந்த தா்பை பாய் மற்றும் கயிறுகளை வைத்து, தேவஸ்தான அதிகாரிகள் முறையாக பூஜை செய்து அவற்றை மாடவீதியில் ஊா்வலமாகக் கொண்டு சென்று கோயிலில் சமா்ப்பித்தனா். கொடியேற்றத்தின்போது, இந்த கயிற்றால் கொடி மரத்தில் கருடக் கொடி ஏற்றப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com