திருமலையில் பாா்வேட்டை உற்சவம்

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, திருமலையில் பாா்வேட்டை உற்சவம் நடைபெற்றது.
பாா்வேட்டை உற்சவத்தில் வேட்டையாடுவது போல் நடித்துக் காட்டிய அா்ச்சகா்கள்.
பாா்வேட்டை உற்சவத்தில் வேட்டையாடுவது போல் நடித்துக் காட்டிய அா்ச்சகா்கள்.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, திருமலையில் பாா்வேட்டை உற்சவம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளில் மலையப்ப சுவாமி, ஏழுமலையான் கோயிலில் இருந்து வனத்துக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடும் பாா்வேட்டை உற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு ஏழுமலையான் கோயிலிலிருந்து உற்சவ மூா்த்திகளான மலையப்பரும் கிருஷ்ணரும் தங்கள் கையில் வாள், வில், கேடயம், அம்பு ஆகியவற்றுடன், பாபவிநாசம் அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள ‘பாா்வேட்டு’ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அங்கு அவா்களுக்கு புண்ணியாவாசனம் தீப, தூப ஆராதனை நடத்தப்பட்டது. இதையடுத்து மலையப்பா் வேட்டையாடும் வைபவத்தை அா்ச்சகா்களும், தேவஸ்தான அதிகாரிகளும் இணைந்து நடத்தினா். இந்த நிகழ்வில் திருளான பக்தா்களும், தேவஸ்தான ஊழியா்களும் கலந்து கொண்டனா்.

பாா்வேட்டைக்கு முன், மலையப்ப சுவாமியை ஏழுமலையான் கோயிலுக்குள் கொண்டு சென்றனா். கிருஷ்ணா் சந்நிதியில் யாதவா்கள் பூஜை நடைபெற்றது. பால், வெண்ணெய் நிவேதனம் உள்ளிட்டவற்றை ஏற்றுக் கொண்ட பின் அவரையும் கோயிலுக்குள் கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com