திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் தேரோட்டம்

மாசி பிரம்மோற்சவ திருவிழாவினையொட்டி  திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜசுவாமி திருக்கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் தேரோட்டம்

திருவொற்றியூர்: மாசி பிரம்மோற்சவ திருவிழாவினையொட்டி  திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜசுவாமி திருக்கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். 

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலில்  பிரம்மோற்சவ மாசிப்பெருவிழா கடந்த பிப்.18}ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை 10  மணிக்குத் தொடங்கியது.

நிலையில் இருந்த தேர் வெளியே கொண்டுவருவதற்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இதனைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் இருந்த பொதுமக்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நகரத் தொடங்கியது. தேர் சன்னதி தெருவில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாடவீதிகள் வழியாக வந்து மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சன்னதி தெரு வழியாக சுமார் 2 மணியளவில்  நிலையை அடைந்தது. தேரோட்டம் நடைபெற்றதையொட்டி வீதியெங்கும் ஆங்காங்கு தண்ணீர், மோர், பழரசம், அன்னதானம் உள்ளிட்டவைகள் பொதுமக்கள் ஆங்காங்கு வழங்கியபடி இருந்தனர். 

மாசி பிரம்மோற்சவ திருவிழாவினையொட்டி திருவொற்றியூர் நகரத்தார் சங்கம் சார்பில் தடையில்லா அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

 திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதையடுத்து நூற்றுக்கணக்கான போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com