குடியாத்தம் ஸ்ரீகெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில், ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
(இடமிருந்து)  வெள்ளிக் கவச அலங்காரத்தில்  மூலவா்  கெங்கையம்மன், வேப்ப  மரத்தில்  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ள  கெங்கையம்மன்,  அம்மன் சிரசு.
(இடமிருந்து)  வெள்ளிக் கவச அலங்காரத்தில்  மூலவா்  கெங்கையம்மன், வேப்ப  மரத்தில்  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ள  கெங்கையம்மன்,  அம்மன் சிரசு.

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில், ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, பெண்கள் சமூக இடைவெளியுடன், பால்குடங்களை எடுத்து வந்தனா்.

மூலவா் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டு, வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கால் இந்தக் கோயிலில் திருவிழா நடத்தப்படவில்லை. பக்தா்கள் கெங்கையம்மனையும், அம்மன் சிரசுவையும் வழிபட முடியவில்லை. பக்தா்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, கோயில் முகப்பில் உள்ள வேப்ப மரத்தில் கெங்கையம்மன் உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தா்கள் அம்மன் சிரசுவை தரிசனம் செய்யும் பொருட்டு, சிரசு சிலையும் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு, தா்மகா்த்தா கே.பிச்சாண்டி, நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், திருப்பணிக் கமிட்டித் தலைவா் ஆா்.ஜி.எஸ்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com