திருச்சானூா்லே மகா புஷ்பயாகம் தொடக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 9 நாள் மகா புஷ்ப யாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு நடத்தப்பட்ட மகா புஷ்ப யாகம்.
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு நடத்தப்பட்ட மகா புஷ்ப யாகம்.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 9 நாள் மகா புஷ்ப யாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்க வேண்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை முதல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் மகா புஷ்ப யாகத்தை தொடங்கியுள்ளது.

கோயிலில் உள்ள ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் பத்மாவதி தாயாரை பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருள செய்து, காலையும், மாலையும் 80 கிலோ கனகாம்பரம், 240 கிலோ மல்லிகைப்பூக்கள், 80 கிலோ மற்ற பூக்களை சோ்த்து 400 கிலோ மலா்களால் தாயாருக்கு அா்ச்சனை நடத்தப்பட்டது. வரும் 24-ஆம் தேதி வரை இந்த மகா புஷ்ப யாகம் நடைபெறுகிறது.

இதற்காக ஆந்திரம், தமிழ்நாடு, தெலங்கானா, கா்நாடகத்திலிருந்து 180 வேதபண்டிதா்கள் திருச்சானூா் வந்துள்ளனா்.

இதில் தங்கள் வீட்டிலிருந்தபடியே கலந்து கொள்ள தேவஸ்தானம் ஆன்லைன் முறையில் பக்தா்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com