வருமானம் இரட்டிப்பாகும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள் (மார்ச் 05 - 11)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மார்ச் 05 - மார்ச் 11) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
வருமானம் இரட்டிப்பாகும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள் (மார்ச் 05 - 11)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மார்ச் 05 - மார்ச் 11) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். ஆடை அணிகலன்கள், விலையுயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். உறவினர்களுடன் கலந்துரையாடி மகிழ்வீர்கள். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்னைகள் தீரும். வியாபாரிகளுக்கு வருமானம் பலவகைகளிலும் பெருகும். கூட்டுத்தொழில் செய்வோர் கவனமாக இருக்கவும். விவசாயிகள் பயிர்களுக்கு சரியான நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்துகளை உபயோகிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவினால் செல்வாக்கு பெருகும். தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு பல காலமாக வராமலிருந்த தொகை தற்போது கை வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெண்மணிகள் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மாணவமணிகள் பெற்றோரின் ஆதரவுடன் விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். படிப்பிலும் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான  தினங்கள்: 07, 08.

சந்திராஷ்டமம்: 05, 06.

******

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

வருமானம் சீராக இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும். சகோதர சகோதரி வகையில் சில ஆதாயங்கள் ஏற்படும். எவருக்கும் கடன் கொடுப்பதற்கு முன் யோசித்து செயல்படவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். அலுவலக வேலையில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். வியாபாரிகள் அகலக்கால் வைக்காதீர்கள். சிறு சிறு முதலீடுகள் செய்து வியாபாரத்தைப் பெருக்கலாம். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைக் காண்பார்கள். புதிய நிலங்களை வாங்குவார்கள். 

அரசியல்வாதிகளுக்கு இடையில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

பெண்மணிகள் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்லவும். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகும். தோல் சம்பந்தமான வியாதிகள் தோன்றும்.

மாணவமணிகள் விளையாட்டுகளில் ஜாக்கிரதையாக ஈடுபடவும். நன்றாகப் படித்து தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 06, 09. சந்திராஷ்டமம்: 07, 08.

******

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சூழ்நிலை சற்று பதட்டமாகவே இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சகஜமாக பழகத் தொடங்குங்கள். வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வருமானம் சீராக இராது.  

உத்தியோகஸ்தர்களுடன் மேலதிகாரிகள் சுமுகமாகப் பழகுவார்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். விவசாயிகள் கால்நடைகளால் பயனடைவீர்கள். உடன் இருப்பவர்களால் உதவிகள் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சியின் மேலிடத்தில் ஆலோசனை பெற்று பிரசாரம் மேற்கொள்ள நேரிடும். கலைத்துறையினர் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன்பு ஆலோசித்து முடிவெடுக்கவும்.

பெண்மணிகள் பெரியோரின் பேச்சைக் கேட்டு காரியங்களைத் திட்டமிடுங்கள். ஆடை அணிகலன்கள் சேர்க்கை நிகழும். மாணவமணிகள் வருங்காலத்திற்கான தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு திட்டங்களைத் தீட்டுவீர்கள். அனைவருடனும் சுமுகமாகப் பழகவும்.

பரிகாரம்: சனி பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 07, 08. 

சந்திராஷ்டமம்: 09, 10.

******
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

நண்பர்களுடன் சுமூகமான உறவை மேற்கொள்வீர்கள். சமூகத்தில் உயர்ந்தவர்களின் உதவிகள் கிடைக்கும். திடீர் பண வரவைக் காண்பீர்கள். பூர்வீகச் சொத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்கள். வாகனங்களால் செலவு அதிகமாகும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களும் ஆதரவு கொடுப்பார்கள். அலுவலக வேலைகளைப் பதற்றப்படாமல் செய்வீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளில் பொருள்களை விற்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாகவே முடியும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். தொண்டர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் அமையும். 

பெண்மணிகள் குழந்தைகளினால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவருடன் ஒற்றுமை நிலவும். மாணவமணிகள் கடுமையாக உழைத்தால் தான் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டில் கவனத்தை குறைத்து கொண்டு கல்வியில் நாட்டம் செலுத்தவும்.

பரிகாரம்: சிவ பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 05, 09. 

சந்திராஷ்டமம்: 11.

******

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

வருமானம் சற்று உயரும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கோபப்படாமல் அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் பேசிப் பழகுவீர்கள். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொண்டு அரசிடம் சமர்ப்பிப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு இடப்பட்ட பணிகளைத் திறம்பட செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு அதிக லாபத்தை எதிர்பார்த்து கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சுமுகமான நிலைமை நீடிக்கும். விவசாயிகளுக்கு வருமானம் பல வகைகளில் வந்துசேரும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு குறைந்து காணப்படும். கட்சிப் பணிகளில் நாட்டம் குறையும். கலைத்துறையினருக்கு வருமானம் பெருகும். பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். 

பெண்மணிகள் கணவரிடம் எதிர்பார்த்த அன்பையும் பாசத்தையும் பெறுவீர்கள். சேமிப்பை அதிகப்படுத்திக் கொள்ளவும். மாணவமணிகள் பெற்றோரையும் ஆசிரியர்களையும் அனுசரித்துச் செல்லவும். உடற்பயிற்சிகளில் கவனத்துடன் ஈடுபடவேண்டும்.

பரிகாரம்: இஞ்சிமேடு நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 05, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை.
 

******

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சில குழப்பங்கள் நிகழும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் மாற்றம் ஏதும் இராது. பெற்றோர், பெரியவர்களின் உதவியால் திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். வியாபாரிகள் புதிய மாற்றங்களை உருவாக்கி, வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் லாபம் காண்பீர்கள். விவசாயிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய குத்தகைகளால் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். கட்சிப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பயணங்களில் தடை ஏற்படலாம். கடின முயற்சிக்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

பெண்மணிகளுக்கு வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு உறவினர்களிடையே மனஸ்தாபம் உண்டாகும். கவனமாக இருக்கவும். மாணவமணிகள் பெற்றோரை அனுசரித்து நடந்துகொள்ளவும். 
விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.

பரிகாரம்: பழனி முருகனை வழிபடவும். 

அனுகூலமான  தினங்கள்: 08, 09. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் சிந்தனை சக்தி மேலோங்கும். வருமானம் இரட்டிப்பாகும் தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு காரியங்களை சாதிப்பீர்கள் உங்கள் சொல் எடுபடும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்புடன் நடந்து கொள்வார்கள். பிரச்னைகள் குறையும். வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். பணப்புழக்கம் சற்று குறையும். விவசாயிகள் கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். உற்பத்திப் பொருட்களில் லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் குறைந்து காணப்படும். எடுத்த காரியங்களில் தொய்வு நிலையைக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு சரளமாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு பேசும் நேரத்தில் நிதானம் தேவை. கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் போதிய அக்கறை காட்டவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 06, 07. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வருமானம் உயரும் தொழில் அபிவிருத்தி ஏற்படும். எதிர்ப்புகள் மறையும் பிறரிடம் இருந்து உதவிகளைப் பெறுவீர்கள். பயணங்களின் போது கவனம் தேவை. 

உத்தியோகஸ்தர்களின் நலனில் மேலதிகாரிகள் அக்கறை காட்டுவார்கள். எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு தற்போது புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். விவசாயிகளுக்கு விற்பனையில் லாபம் கிட்டும். அனைத்து பணிகளும் சுமுகமாக முடியும். 

அரசியல்வாதிகளுக்கு மனதில் ஏற்படும் குழப்பங்கள் தீரும். மேலிடத்தின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தேவையான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எதிர்காலக் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும் காலம் இது. பெண்மணிகளுக்கு உடல்நலத்தில் கவனம் தேவை. கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் தீவிரமான பயிற்சிகள் மேற்கொண்டு கடின உழைப்புடன் படிப்பீர்கள். நினைத்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: கந்தகோட்டம் முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 10, 11. 

சந்திராஷ்டமம்: இல்லை.
 

******

தனுசு(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

செய்தொழிலில் லாபத்தைக் காண்பீர்கள். நண்பர்கள் உங்களின் தயவை நாடி வந்து காரியங்களை சாதித்துக் கொள்வார்கள் பெற்றோருடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்வீர்கள் குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் வரவு செலவு காரணமாக விரோதம் உண்டாகும் கணக்கு வழக்குகளில் கவனம் தேவை விவசாயிகள் பயிர் உற்பத்தியில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள் கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். 

அரசியல்வாதிகள் முயற்சிக்கு ஏற்ற பதவி உயர்வுகளைப் பெறுவீர்கள். உடல் சோர்வை பார்க்காமல் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் ஆதரவினால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.

பெண்மணிகள் கணவரிடம் அன்புடன் நடந்து கொள்வீர்கள். பணவரவுக்கு குறைவு வராது. மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். பெற்றோரின் ஆதரவும் உங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான  தினங்கள்: 07, 10.

சந்திராஷ்டமம்: இல்லை.

******

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். பணவசதி சரளமாக இருக்கும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கும் வழக்குகளில் வெற்றி உண்டாகும் உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாக இருக்கும். விழிப்புடன் இருந்தால் நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம். விவசாயிகளுக்கு பழைய வழக்குகள் உங்களுக்கு மன வேதனையைத் தரும். கடுமையாக உழைத்தால் முன்னேற்றத்தைக் காணலாம். 

அரசியல்வாதிகளுக்கு பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய பதவிகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். பின்தங்கிய நிலையிலிருந்து விடுபடுவீர்கள்.

பெண்மணிகள் அறிமுகம் இல்லாதவர்களை நம்ப வேண்டாம்.  இல்லத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவமணிகள் பெற்றோரை அறிவுரைகளை கேட்டு மதித்து நடந்து கொள்ளவும். யோகா பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடவும்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 09, 11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

செய்தொழிலில் இருக்கும் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். உங்களின் செயல்களை நல்லவர்களின் ஆதரவுடன் செய்து முடிப்பீர்கள். ஏற்ற இறக்கமாக இருந்த தொழில் படிப்படியாக உயரும். பணவரவு நன்றாக இருக்கும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் அன்பையும் ஆதரவையும் புரிந்துகொண்டு சகஜமாக பழகவும். எடுத்த காரியங்கள் பிரச்னையின்றி முடியும்.

வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகள் வெற்றியைத் தேடித்தரும். நண்பர்களைக் கலந்து ஆலோசித்து செயல்படவும். விவசாயிகள் பயிர்களுக்கு புழு பூச்சிகளின் பாதிப்பு நீங்க மருந்து பயன்படுத்துவீர்கள். மகசூல் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் நிலைமைக்கு தகுந்தவாறு நடந்து கொள்வீர்கள். எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். புகழும் பாராட்டும் அதிகரிக்கும். 

பெண்மணிகள் கணவரிடம் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும் பிறரின் பேச்சை மதித்து நடக்கவும். மாணவமணிகள் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 10, 11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சுபகாரியங்கள் நடத்துவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். பேசும் போது கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் காரியங்கள் வீண் போகாது. உங்கள் முயற்சிகள் எதுவும் வீண் போகாது உறவினர்கள் நண்பர்கள் உதவுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் சுமுகமாகப் பழகவும். அதிகம் வேலைப்பளு இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். நண்பர்களிடம் மனக்கசப்பு ஏற்படும். விவசாயிகளுக்கு பால் வியாபாரம் நன்றாக இருக்கும். புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். உற்பத்திப் பொருட்களில் லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் நற்பெயர் வாங்குவீர்கள். கட்சியில் மாற்றங்களை கொண்டுவர நினைக்கவேண்டாம். கலைத்துறையில் பாடகர்களுக்கு சாதகமான காலம் ஆகும். வாய்ப்புகள் பெருகும். சக கலைஞர்களுடன் அனுசரணையுடன் நடந்து கொள்ளவும்.

பெண்மணிகள் குடும்பத்தினருடன் ஒற்றுமையோடு நடந்து கொள்ளவும். இல்லத்தில் மழலை சப்தம் கேட்கும். மாணவமணிகள் வருங்காலத்திற்காக செய்யும் முயற்சிகள் அனைத்தும் கைகொடுக்கும். விடியற்காலையில் எழுந்து படிக்கவும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 06, 11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com