வருமானம் அதிகரிக்கப்போகுது இந்த ராசிக்காரர்களுக்கு: வாரப் பலன்கள் (மார்ச் 26 -ஏப்.1)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மார்ச் 26 - ஏப்ரல் 1) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
வாரப் பலன்கள் (மார்ச் 26 -ஏப்.1)
வாரப் பலன்கள் (மார்ச் 26 -ஏப்.1)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மார்ச் 26 - ஏப்ரல் 1) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பெரியோர்களைத் தேடிச்சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். வருமானமும் செலவும் ஒரே அளவுகோலில் இருக்கும். சிக்கனமாக இருந்து செலவினங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீர்கள். அலுவலக வேலையில் இருந்த பிரச்னைகள் குறையும். வியாபாரிகள் தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். வரவு - செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். கருப்பு நிறப் பொருள்கள் உற்பத்தியில் லாபம் அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மாற்றத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தப் பாடுபடுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கலைத்துறையினர் புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். 

புதிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பெண்மணிகள் புதுப்புது ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிகாலையில் எழுந்து படித்து பாடங்களை மனதில் பதிய வையுங்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 26, 27. 

சந்திராஷ்டமம்: 01.

******

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் நல்ல முறையில் நடத்திச் செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். நன்கு ஆராய்ந்த பிறகே புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் சுமுகமாக இருப்பீர்கள். மேலதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வீர்கள். 

வியாபாரிகள் அதிக முதலீடு செய்யாமல் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். நேரிடை பார்வையில் நல்ல லாபம் காண்பீர்கள். விவசாயிகள் கையில் உள்ள பொருள்களுக்கு சந்தை மதிப்பு அதிகரிக்கும். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்ற மனநிலையை அடைவீர்கள். மன அழுத்தம் ஏற்படும். கலைத்துறையினருக்கு உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைக்கும். விருதுகளும், பட்டங்களும் உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசாக அமையும். 

பெண்மணிகள் பொருளாதார அபிவிருத்தியை அடைவீர்கள். புதிய வீடு, மனை வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். படிப்பில் போதிய அக்கறை காட்டவும். 

பரிகாரம்: "நாராயணீயம்' பாராயணம் செய்யவும். 

அனுகூலமான  தினங்கள்: 26, 28.

சந்திராஷ்டமம்: இல்லை.

******

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இல்லத்தில் புத்திர பாக்கியம் உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கணவன், மனைவி உறவில் பாசம் அதிகரிக்கும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்க்கையை நடத்துவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டினால் மகிழ்ச்சி அடைவீர்கள். வரவேண்டிய ஊக்கத் தொகை வந்துசேரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக இருக்கும். 

எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும், கவனமாக இருக்கவும். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது கவனம் செலுத்தவும். நீர் வரத்து அதிகமாக உள்ளதால், விளைச்சலைப் பெருக்கி லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் விழிப்புடன் இருந்து பணியாற்றுவீர்கள். கட்சி மேலிடத்தின் பார்வையால் கவனிக்கப் படுவீர்கள். கலைத்துறையினருக்கு விருதுகளுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். உழைப்புக்கேற்ற பலனை அடைந்து மகிழ்வீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் பாசம் அதிகரிக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவமணிகள் உற்சாகத்துடன் இருக்க உடற்பயிற்சிகளைச் செய்யவும். பெற்றோரின் பேச்சை மதித்து நடந்து கொள்ளவும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 27, 28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

புதுப்புது நண்பர்கள் கிடைப்பார்கள். சமூகத்தில் உயர்ந்தவர்களைச் சந்திப்பீர்கள். நீங்கள் நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். புதிய கடன்கள் கிடைக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு உதவியாக இருந்த மேலதிகாரிகள் இடம் மாறிச் செல்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது அரிது. வியாபாரிகள் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்வீர்கள். 

எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகமாக இருக்கும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் புதிய பதவிகளைத் தேடிப் போக வேண்டாம். உங்கள் செயல்பாடுகளுக்கு ஏற்ப வெற்றிவாய்ப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் அந்தஸ்து உயரும். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். 

பெண்மணிகள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். பெற்றோரை எதிர்த்து பேசாதீர்கள். யோகா, பிராணாயாமம் செய்வதில் ஆர்வம் கொள்வீர்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 27, 29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பிரச்னைகள் விலகி, பூர்வீகச் சொத்துகள் திடீரென்று கை வந்து சேரும். புதிய வீடு மாறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். வேலைப் பளுவால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும் முயற்சிக்குத் தகுந்த லாபம் கிட்டும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகள் எடுப்பதில் சிறிது சிரமம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். எதிர்க்கட்சிக்காரர்களின் தொல்லைகள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் உதவுவார்கள். புதிய வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். 

பெண்மணிகள் தங்களின் தனித்தன்மையை வெளிக்காட்டும் வாய்ப்பு ஏற்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். மாணவமணிகள் நண்பர்களால் பாராட்டப்படுவீர்கள். வெளிநாடு சென்று படிப்பதற்கு முயற்சி எடுப்பீர்கள். உடற்பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 27, 30. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். திட்டமிட்டபடி உங்கள் காரியங்களில் வெற்றி அடைவீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். உடலிலும், மனதிலும் ஏற்பட்ட சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் மனதை அரித்து வந்த பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரிகள் புதிய உத்திகளைப் பயன்படுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே இருக்கும். விவசாயிகள் கால்நடைகளின் மூலம் விவசாயத்தைப் பெருக்குவீர்கள். உற்பத்தி பொருள்களால் லாபம் அடைவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு  உட்கட்சி பூசல் அதிகரிக்கும்.  சமாதான முயற்சியில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் விறுவிறுப்புடன் செயல்படுவீர்கள். பழைய ஒப்பந்தங்களை முடித்து, புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி பொங்கும். மாணவமணிகள் பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். 

பரிகாரம்: இஞ்சிமேடு நரசிம்மரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான  தினங்கள்: 26, 29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் எதிர்பார்த்தபடியே முடியும். நல்லோர் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். தந்தை வழி சொத்துகளில் சில பிரச்னைகள் ஏற்படும், சாதுர்யமாக சமாளிப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் புதிய கடன் வாங்க வேண்டாம். புதிய முதலீடுகள் செய்யாமல் படிப்படியாக முன்னேற்றம் அடைவீர்கள். விவசாயிகளின் பொருளாதார நிலைமை சீராகும். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும்.  

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பாராத பயணங்களால் பயனடைவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டப் பாடுபடுவீர்கள். 

மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் காண அதிகாலையில் எழுந்து படிப்பீர்கள். நல்ல நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: ஹயக்கிரீவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 28, 31. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் வருமானம் உயரும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பேச்சில் கனிவு உண்டாகும். நடை உடை பாவனைகளில் மாற்றம் தென்படும். நண்பர்கள் பரஸ்பரம் அன்பு பாராட்டுவார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலைப்பளு குறையும். 

வியாபாரிகளுக்கு வாகனச் செலவு சற்று அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் சற்று கவனம் தேவை. விவசாயிகள் அனைத்து விவசாயப் பணிகளையும் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சக விவசாயிகளும் உதவி செய்வார்கள். 

அரசியல்வாதிகள் மேலிடம் கொடுத்த வேலைகளைக் கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் குவியும். உழைப்புக்கேற்ற சன்மானம் பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடன் அன்பு அதிகரிக்கும். தாயார் வழியில் சற்று மனஸ்தாபம் ஏற்படும் என்றாலும் சமாளிப்பீர்கள். மாணவமணிகள் நினைத்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு கடினமாக உழைப்பீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். 

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வரவும்.

அனுகூலமான  தினங்கள்: 27, 30.

சந்திராஷ்டமம்: இல்லை.

******

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம், மனநிலை சீராக இருக்கும். செய்தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் சிறு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது, கவனமாக இருக்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருக்கும். உங்கள் வேலைகளைக் குறித்த காலத்தில் செய்து நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். விவசாயிகள் கால்நடைகளால் நல்ல பலனை அடைவீர்கள். எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் இறங்கித் திறமையை வெளிப்படுத்துவீர்கள். தொண்டர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு பண வரவுக்கு குறைவிருக்காது. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு கணவர் வீட்டாருடன் உறவு மேம்படும். அனைவரிடமும் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவ மணிகள் விளையாட்டில் வெற்றி பெற அதிகம் பாடுபடுவீர்கள். வெளிநாடு சென்று கல்வி கற்க தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: ராமபக்த ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 29, 31. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வீண் வம்பு வழக்குகள் நீங்கும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். உங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.  
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். அலுவலக வேலைகளில் கவனமாக இருக்கவும். 

வியாபாரிகள் வியாபாரத்தில் நேரிடையாக ஈடுபடவும். நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும். விவசாயிகள் நீர்ப் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். 

அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபடுவீர்கள். புதிய நம்பிக்கை பளிச்சிடும். 

பெண்மணிகளுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் உண்டாகலாம். கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அனைவரிடமும் எரிச்சல் படாமல், அன்பு காட்டவும். மாணவமணிகள் கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள். ஆசிரியர் சொற்படி நடந்து கொள்வீர்கள்.

பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 28, 01. 

சந்திராஷ்டமம்: 26, 27.

******

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சுபச் செய்திகள் தேடிவரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். மன அமைதி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளவும். மந்தமாக நடந்த காரியங்கள் சுறுசுறுப்பாக நிறைவேறும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படும். அனுசரித்து நடந்து அனைத்தையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் பொறுமையுடன் வியாபாரத்தை நடத்துவீர்கள். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்காமல், உடனுக்குடன் முடித்துக் கொடுப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளாலும் லாபம் அடைவீர்கள். புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் உங்களைக் கவனிக்கும்படி நடந்து கொள்வீர்கள். பொது சேவையால் நன்மைகள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களால் வாய்ப்புகள் கிடைக்கும். கூடுதல் வருமானத்திற்கு வழி பிறக்கும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மாணவமணிகள் அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிக்கவும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடவும். 

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 26, 31. 

சந்திராஷ்டமம்: 28, 29.

******

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்களின் முதலீடுகள் எதிர்பாராத லாபத்தை அள்ளித்தரும். தீயோரின் சகவாசம் நீங்கி, நல்லவர்களுடன் நட்பு கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம் சற்று விலகி இருப்பது நல்லது. செய்தொழிலில் தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படாது. அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு பணியாற்றவும். வியாபாரிகள் உழைப்பிற்குத் தகுந்த பலனை அடைவீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முயற்சிப்பீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து லாபம் அடைவீர்கள். கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். 

அரசியல்வாதிகள் கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்டாதீர்கள். மிகக் கவனமாகப் பேசவும். கலைத்துறையினர் ரசிகர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். திறமைக்குத் தகுந்த வாய்ப்புகள் உண்டாகும். 
பெண்மணிகள் மனதில் ஏதேனும் குறை இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பீர்கள். மாணவமணிகள் கடுமையாக உழைத்து அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கல்வியில் நாட்டம் உண்டாகும். விளையாட்டுகளைக் குறைத்துக் கொள்ளவும். 

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 28, 29. 

சந்திராஷ்டமம்: 30, 31.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com