Enable Javscript for better performance
வீடு வாங்கும் யோகம் உண்டு இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்- Dinamani

சுடச்சுட

    

    வீடு வாங்கும் யோகம் உண்டு இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

    Published on : 10th May 2021 04:20 PM  |   அ+அ அ-   |    |  

    astrology-

    வாரப் பலன்கள் (மார்ச் 26 -ஏப்.1)

     

    12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மே 7 - மே 13) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

    மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

    உங்களின் ஆற்றல், திறமை எல்லாம் வெளியே தெரிய வரும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். புனிதப் பயணங்களைப் பற்றி ஆலோசித்துக் கொண்டு
    இருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும்.  

    உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் சந்தோஷத்துடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரிகள் பழைய
    கடன்களை சிறிது அடைத்து விடுவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். மகசூலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

    அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். தொண்டர்கள் துணையுடன் காரியங்களை வெற்றிகரமாக நடத்துவீர்கள். கலைத்துறையினர் வெற்றிப்பாதையில் செல்ல மிகுந்த பிரயத்தனம் செய்வீர்கள். ஒரு சில காரியங்களை வெற்றிகரமாக நடத்தி முடிப்பீர்கள். 

    பெண்மணிகளுக்கு ஆடை ஆபரணங்களைவாங்கி மகிழ்வீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் அக்கறை காட்டுங்கள்.

    பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 

    அனுகூலமான  தினங்கள்: 07, 08. 

    சந்திராஷ்டமம்: இல்லை.


    ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

    உங்களின் விடாமுயற்சியால் கடுமையான பணிகளையும் சுலபமாக முடித்து விடுவீர்கள். மகான்களையும் மனதார பிரார்த்தனை செய்வதால் தன்னம்பிக்கை
    உயரும். உற்றார் உறவினர்களின் உதவி கிடைக்கும்.  

    உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலைகளைச் சரிவர புரிந்து கொண்டு கச்சிதமாக முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் திருப்திகரமாக முடியும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளால் நல்ல லாபமும் கிடைக்கும். 

    அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளில் நிறைய தடைகளைச் சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். பெயரும் புகழும் மேம்படும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களின் உதவியாலும் நல்ல திருப்பங்களைச் சந்திப்பீர்கள். 

    பெண்மணிகள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கணவருடன் அன்பு அதிகரிக்கும். 

    மாணவமணிகள் பிறருடன் கூடிப் பழகுவதைத் தவிர்க்கவும். தேவையான நண்பர்களைச் சந்தியுங்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் இது.

    பரிகாரம்: குலதெய்வத்தை வழிபடவும். அனுகூலமான  தினங்கள்: 07, 09. சந்திராஷ்டமம்: இல்லை.


    மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

    அனுபவஸ்தர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். கவலைகள் சற்று அதிகரிக்கும். திடீர் பண வரவு உண்டு. சிலருக்கு பயண அலைச்சல் மிகுதியாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். 

    உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் தொல்லையையும், கெடுபிடிகளையும் அதிகம் சந்திக்க வேண்டிவரும். கடுமையாக உழைத்து முன்னேற பாடுபடுவீர்கள். வியாபாரிகள் புதிய கடன்களைப் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகள் தடைகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். மகசூல் நன்றாக இருக்கும்.

    அரசியல்வாதிகள் தொண்டர்களைச் சற்று அனுசரித்து செல்லுங்கள். பிரயாணத்தைத் தவிர்த்துவிடுங்கள். கலைத்துறையினர் திறமை பளிச்சிடும் நேரமிது. சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். 
    பெண்மணிகளுக்கு கணவருடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். மாணவமணிகள் மிகுந்த அக்கறையுடன் படித்து நினைத்த பாடப் பிரிவுகளில் சேருவீர்கள். 

    பரிகாரம்: கால பைரவரை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 08, 09. சந்திராஷ்டமம்: இல்லை.


    கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

    உங்களுக்கு தெய்வ அனுகூலம் சிறப்பாகவே இருக்கும். நன்மைகள் கூடும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்படும். செலவுகள் கட்டுப்படும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கடுமையாக உழைத்தால் வெற்றி தேடி வரும். லாபம் பெருகும். வாடிக்கையாள்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். ஆனாலும் புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம். 

    அரசியல்வாதிகள் நினைத்த காரியங்களை புதிய உத்திகள் மூலம் செய்து முடிப்பீர்கள். கட்சி மேலிடத்தில் பாராட்டும் கிடைக்கும். கலைத் துறையினரின்
    படைப்புகள் சரியான முறையில் மக்களைச் சேரும். திறமைகள் பளிச்சிடும். 

    பெண்மணிகளுக்கு பணவரவுக்கு குறைவு இராது. கணவரிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மாணவமணிகள் கவனத்துடன் படித்து அதிக மதிப்பெண்களை
    எடுத்து மகிழ்வீர்கள். விரும்பிய பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பீர்கள்.

    பரிகாரம்: ஸ்ரீ துளசி தேவியை பூஜித்து வரவும். அனுகூலமான  தினங்கள்: 09, 10. சந்திராஷ்டமம்: இல்லை.


    சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

    பொருளாதார நிலை ஏற்றமாக இருக்கும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். உங்களின் எல்லா செயல்களும் நேர்த்தியாகவே முடியும். சகோதர சகோதரி
    வகையில் சிறப்புகள் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். 

    உத்தியோகஸ்தர்கள் செய்கின்ற வேலைகளில் குறைகள் உண்டாகலாம். வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு இது உகந்த நேரமல்ல. கூட்டு வியாபாரத்தைத் தவிர்க்கவும். விவசாயிகள் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தாற்போல் தானியங்களின் விலையை நிர்ணயிப்பது நல்லது. கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும்.

    அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு படவாய்ப்புகள் சுமாராகவே வரும். இருப்பினும் உங்கள் திறமை பளிச்சிடும். 

    பெண்மணிகள் செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துங்கள். கணவர் வீட்டாருடன் சுமுகமாக நடந்துகொள்வீர்கள். மாணவ மாணவிகளுக்கு
    விளையாட்டில் கவனம் தேவை. ஆசிரியர்களின் ஆதரவினால் படிப்பில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

    பரிகாரம்: ஸ்ரீ பெருமாளை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 10, 11. சந்திராஷ்டமம்: 07, 08, 09.


    கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

    உங்களுக்கு வருமானம் சீராகவே இருக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆனாலும் பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. சிலருக்கு குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம். 

    உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் உங்களிடம் நட்புடன் நடந்து கொள்வார்கள். பிரச்னைகள் குறையும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

    வியாபாரத்தை விரிவாக்கும் நோக்கத்துடன் கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழில் தொடங்குவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் அதிக லாபம் ஈட்டுவீர்கள். உற்பத்தி பொருள்களில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு நன்மைகளே நடக்கும். எனினும் எவரிடத்திலும் ரகசியங்களை வெளியிட வேண்டாம். கலைத்துறையினருக்கு பணவரவு தாராளமாகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

    பெண்மணிகளுக்கு உங்கள் அன்பான நடவடிக்கையால் உறவினர்களைக் கவர்வீர்கள். உடல் நலம், மன நலம் சிறப்பாக அமையும். மாணவமணிகள் படிப்பில் போதிய அக்கறை காட்டவும். உடல் ஆரோக்கியம் சீர்பட உடற்பயிற்சி, யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடவும்.

    பரிகாரம்: ஸ்ரீமுருகப் பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 08, 12. சந்திராஷ்டமம்: 10, 11.

    துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

    பொருளாதாரத்தில் சற்று ஏற்றமும் இறக்கமும் இருக்கும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்திலும், உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவீர்கள்.  

    உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் நற்பெயர் கிட்டும். கையிருப்புப் பொருள்களை பத்திரப்படுத்தவும். வியாபாரிகள் கடன் வாங்கி வியாபாரத்தைப்
    பெருக்க வேண்டாம். தங்கள் கூட்டாளிகளின் மேல் ஒரு கண் வையுங்கள்.விவசாயிகள் கால்நடைகளைச் சற்று கூடுதல் கண்காணிப்புடன் கவனிக்கவும். தீவனங்களுக்கு செலவுகள் அதிகமானாலும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். 

    அரசியல்வாதிகளுக்கு கட்சி தலைமையிடம் சுமூகத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இடையிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். கலைத்துறையினர் சிறுசிறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வருமானம் சற்று குறைவாகவே இருக்கும். 

    பெண்மணிகள் கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். மாணவமணிகள் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடாதீர்கள். உடற்பயிற்சியில் சற்று கவனம் செலுத்தவும்.

    பரிகாரம்: ஜெய ஜெய துர்கா என்று ஜபித்து வரவும். அனுகூலமான  தினங்கள்: 08, 11. சந்திராஷ்டமம்: 12, 13.

    விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

    பொருள் வரவு உண்டாகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உறவினர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். பெரியோர் மற்றும் ஆன்றோர்களின் ஆசியால் உங்கள் புகழ் உயரும்.  உடல் நலத்தை சற்று கவனிக்கவும்.

    உத்தியோகஸ்தர்கள் பணவரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் பிரச்னைகளை கூட்டாளிகளிடம் மனம் திறந்து விவாதியுங்கள். எதிர்பார்த்த வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். விவசாயிகள் தானிய உற்பத்தி திருப்திகரமாக இருக்கும். கால்நடைகளால் சற்று விரயம் ஏற்படும்.

    அரசியல்வாதிகள் திட்டமிட்ட வேலைகளைச் செய்து வெற்றி பெற்றுவிடுவீர்கள். எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு உங்களைத் தேடி புதுப்புது ஒப்பந்தங்கள் வரும். இருப்பினும் நன்கு ஆராய்ந்து முடிவு எடுங்கள். 

    பெண்மணிகளுக்கு கணவருடன் மனஸ்தாபம் ஏற்படலாம். முழுமையாகப் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காணுங்கள்.  மாணவமணிகள் பெற்றோர்களின்
    சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.

    பரிகாரம்: ஸ்ரீமுருகப் பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 09, 12. சந்திராஷ்டமம்: இல்லை.


    தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

    இதுவரை எடுத்த காரியங்கள்  சற்று இழுபறியாகவே இருக்கும். உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள கடுமையாக உழைக்க நேரிடும்.  மேலதிகாரிகளின் தொந்தரவும்  கவலையை அதிகரிக்கலாம். 

    உத்தியோகஸ்தர்கள் ஒரு விதமான  பதற்றமான நிலையிலேயே காலத்தை கழிப்பீர்கள். சிலருக்கு வருமானம் உண்டாகும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம்  
    சுமூக உறவை காப்பாற்றிக் கொள்ளவும். கொடுக்கல் வாங்கல் சற்று லாபகரமாக இருக்கும் விவசாயிகள் நீர்வரத்து அதிகமாக இருப்பதால்  லாபமடைவீர்கள். மகசூல் நன்றாக இருக்கும். 

    அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவு பெருகும். உங்களது முயற்சிகள் வெற்றிபெறும். கலைத்துறையினர் வருமானம் குறைவாகவே காணப்படும் பல
    தடைகளைத் தாண்டி புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

    பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை நிலவும்.  இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும். மாணவமணிகள் பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவு பெறுவீர்கள். படிப்பில் கவனம் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிப்பதற்கு உண்டான ஆயத்த வேலைகளில் ஈடுபடுவீர்கள்.

    பரிகாரம்: ஸ்ரீ சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 09, 13. சந்திராஷ்டமம்: இல்லை.

    மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

    உங்களின் கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும். பணத்தின் அருமை புரிய ஆரம்பிக்கும் போது பொருளாதாரத்தில் ஓரளவு வளர்ச்சி காண்பீர்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் வில்லங்கங்கள் ஏற்படும். 

    உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற வேலைகள் இருப்பதால் பணத்தின் அருமையை புரிந்து கொண்டு செலவுகளையும் சிக்கனமாக இருந்து சமாளிப்பீர்கள்.

    வியாபாரிகள் எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானத்துடன் செயல்படுங்கள்.  புதிதாக எதையும் விரிவு படுத்தாதீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். மகசூல் பெருகும். 

    அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு திறமைகள் பளிச்சிடும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதனால் பண வரவு உண்டாகும். 

    பெண்மணிகளுக்கு குடும்பத்தில் இருக்கும் சேமிப்பு செலவாகும்.  மாணவ}மாணவிகள் ஓய்வின்றி உழைத்தால்தான் முன்னேற்றம் பெற முடியும். வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் நிலை உருவாகும்.

    பரிகாரம்: ஸ்ரீ சுவாமி ஐயப்பனை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 12, 13. சந்திராஷ்டமம்: இல்லை.

    கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

    இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் தேடி வரும் பொருளாதார வளர்ச்சி கூடும். ஆதலால் வேலை விஷயங்களில் கவனத்துடன் இருப்பது உத்தமம்.
    எதிர்பார்க்கும் வெளியூர் செய்தி ஒன்று நற்செய்தியாக அமையும்.  வழக்கு விவகாரங்கள்  உங்களுக்கு சாதகமாகும். 

    உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள் . வியாபாரிகள் அதிக
    லாபத்தை எதிர்பார்த்து வீணாக கடன் தொல்லைக்கு ஆளாக வேண்டாம். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சுமுகமான நிலைமை ஏற்படும். விவசாயிகளுக்கு தற்சமயம் புதிய குத்தகைகளை தவிர்க்கவும்.  மகசூல் நன்றாகவே இருந்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். 

    அரசியல்வாதிகள்  தொண்டர்களின் ஆர்வம் குணத்தை காண்பீர்கள்.   கலைத்துறையினர் ரசிகர்களின்  ஆதரவுடன் வலம் வருவீர்கள். முயற்சிகள் வெற்றி தரும்.

    பெண்மணிகள் கணவரின் அன்புக்காக ஏங்குவீர்கள்.  ஆடைகள் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு உழைப்பை மூலதனமாக கொள்ளுங்கள் 

    பரிகாரம்: ஸ்ரீ சுவாமி ஐயப்பனை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 12, 13. சந்திராஷ்டமம்: இல்லை.


    மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

    மகிழ்ச்சிகரமான பயணங்கள் ஏற்படும் . பொருளாதாரத்தில் சுகங்கள் உண்டாகும். மதிப்பு உயரும்.   ஆன்மீக விஷயங்களில் செலவு செய்வது  மகிழ்ச்சி தரும்.  
    குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். 

    உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் அலுவலக வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும் . உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.  வியாபாரிகள் உங்களின் பிரதிநிதிகள் விற்பனையில் லாபம் உயர்த்தினால் மேலும் பல கிளைகளை  விரிவுப்படுத்துவீர்கள். விவசாயிகள் புதிய முதலீட்டுக்கான முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.  

    அரசியல்வாதிகள் கட்சி  மேலிடத்தின் கனிவான பார்வைகளினால்  முன்னேற்றத்தை காண்பீர்கள். பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது.
    கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகும். ரசிகர்களின் நலத்திட்டங்களில் பங்கு பெறுவீர்கள். 

    பெண்மணிகளுக்கு சில்லறை செலவுகள் அதிகரிக்கும்.  சேமிப்பு விஷயங்களில் கவனம் தேவை .கணவரின் பாராட்டும் அன்பும் கிடைக்கும். மாணவமணிகள் வெற்றி பெற அதிக கவனம் செலுத்தவும். பிராணாயாமம் யோகா போன்றவற்றில்கவனம் செலுத்துங்கள்.

    பரிகாரம்: ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 10, 13. சந்திராஷ்டமம்: இல்லை.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp