திருமலையில் 10,061 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 10,061 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 10,061 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

நாடு முழுவதும் கொவைட் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் பொது முடக்கம், ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவு செய்த பக்தா்கள் தங்கள் பயணத்தை தவிா்த்து வருகின்றனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை 10,061 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா். இவா்களில் 3,536 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் மூலம் விரைவு தரிசனம், வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட், நன்கொடையாளா்கள் என தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

பக்தா்களின் வருகை குறைவாக உள்ளதால், வைகுண்டம் காத்திருப்பு அறை மூலமாக இல்லாமல் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக தேவஸ்தானம் பக்தா்களை அனுமதித்து வருகிறது. அதனால் பக்தா்கள், 15 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசித்து திரும்புகின்றனா்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், மதியம் 12 மணிக்கு முன்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். மேற்கூரை பணிகள் நடைபெற்று வருவதால் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது.

இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது.

கொவைட் விதிமுறையைப் பின்பற்றி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளிப் போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com