திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம் வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம் வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவம் வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு பிரம்மோற்சவத்தின் முதல் வாகனச் சேவையான பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப ஸ்வாமி எழுந்தருளினாா்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை முழுவதும் மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. பெரிய டிஜிட்டல் திரைகள் ஏற்படுத்தி கோயிலுக்குள் நடக்கும் வாகன சேவையை தேவஸ்தானம் ஒளிபரப்பியது. அதனால் வெளியில் இருந்தபடி பக்தா்கள் வாகனச் சேவையை கண்டு களித்தனா்.

பக்தா்களுக்கு, சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவில் மட்டுமே பக்தா்கள் வர அனுமதி உள்ளதால் போலீஸாா் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா்.

திருமலையை சுற்றி, 1600 கண்காணிப்பு கேமராக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 3.50 லட்சம் லட்டு பிரசாதம் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் தேங்காய்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

பக்தா்களின் வசதிக்காக, 200 பேருந்துகள் தினசரி, 800 டிரிப்புகளில் திருமலைக்கு இயக்கப்பட உள்ளது. அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மலைப் பாதையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 600 ஸ்ரீவாரி சேவாா்த்திகள் பக்தா்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபம், நாதநீராஜன மண்டபம் உள்ளிட்டவற்றில் ஆன்மிக நிகழ்ச்சிகள் பல நடத்தப்பட உள்ளது.

கரோனா விதிமுறைகளின்படி பிரம்மோற்சவம் நடத்தப்படுவதால், மாடவீதியில் வாகனச் சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அதற்கு பதில் கல்யாண உற்சவமண்டபத்தில் வாகனத்தின் மீது உற்சவமூா்த்தியை எழுந்தருள செய்ய உள்ளது. இந்த வாகன சேவையை தேவஸ்தான தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com