பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம்

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி உற்சவம், முக்குருணி கொழுக்கட்டைப் படையல், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் சதுர்த்தி விழா நிறைவடைந்த
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவம். (வலது) சிறப்பு மலர் அலங்காரத்தில் தங்க மூஷிக வாகனத்தில் அருள்பாலித்த உற்சவர்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவம். (வலது) சிறப்பு மலர் அலங்காரத்தில் தங்க மூஷிக வாகனத்தில் அருள்பாலித்த உற்சவர்.


திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி உற்சவம், முக்குருணி கொழுக்கட்டைப் படையல், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் சதுர்த்தி விழா நிறைவடைந்தது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சதுர்த்தி விழா 10 நாள்கள் நடைபெறும். கடந்த செப். 1 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவர் பல்வேறு வாகனங்களில் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்தார். நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கோயில் எதிரேயுள்ள குளக்கரையில் உற்சவர் தங்கமூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து பிச்சைக்குருக்கள், சோமசுந்தரக்குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழுங்க அங்குசத் தேவருக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். நிறைவாக புனித கலசத்தில் இருந்த நீரால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அங்குசத் தேவருடன் சிவாச்சாரியார் குளத்தில் மூழ்கி தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் நண்பகல் 1 மணிக்கு முக்குருணி மோதகம் பிள்ளையாருக்குப் படையலாக வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை ஐம்பெரும் கடவுளர் திருநாள் மண்டபம் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடைபெற்று கோயில் உள்பிரகாரம் வலம் வந்தனர்.

கரோனா தொற்று காலம் என்பதால் தீர்த்தவாரி உற்சவத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை காரைக்குடி அ. ராமசாமி, வலையபட்டி மு. நாகப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com