நல்ல செய்தி காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்!

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
நல்ல செய்தி காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்!

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பெரியோரின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். ஆன்மிக விஷயங்களில் பங்கேற்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

பணப்புழக்கம் சீராக இருக்கும். போட்டிகளில் பங்கேற்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எதிர்பார்ப்புக்கேற்ப நடந்துகொள்வார்கள்.

வியாபாரிகளின் திறமைகள் பளிச்சிடும். விவசாயிகளின் கொள்முதல் லாபம் அதிகரிக்கும்.  

அரசியல்வாதிகள் காரியங்களில் கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் புதிய சாதனைகளைப் படைப்பார்கள். பெண்களின் வருவாய் உயரும். மாணவர்களுக்கு ஆராய்ச்சித் தேடல் பிறக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

வெளியூர், வெளிநாட்டுப் பயணம் கைகூடும். சிந்தித்து முடிவுகளை எடுப்பீர்கள். வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கல் இறக்கமாகவே இருக்கும். விவசாயிகள் விளைச்சலில் மேன்மையைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்துடன் மகிழ்ச்சியாகப் பழகுவார்கள்.

கலைத்துறையினருக்கு ரசிகர்களிடம் பாராட்டு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பார்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தினரின் எண்ணங்களைப் புரிந்து நடந்துகொள்வீர்கள். உடன் பிறந்தோருடன் சுமுகமான உறவு தொடரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்துவிடுவார்கள்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் வருகை கூட காண்பார்கள். விவசாயிகள் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவார்கள். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி பெறுவார்கள்.

கலைத்துறையினர் தங்கள் கொள்கையில் விடாப்பிடியாக இருப்பார்கள். பெண்களுக்கு செல்வாக்கு உயரும். மாணவர்கள் கடமைகளைச் சரிவர ஆற்றுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

காரியங்களைப் பொறுப்புடன் உணர்ச்சி வேகமின்றி சரியாகச் செய்து முடிப்பீர்கள்.  உடன்பிறந்தோரிடம் கருத்து வேறுபாடுகள் மறையும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஒப்புக் கொள்வீர்கள். வியாபாரிகள் பொருள்கள் விற்பனையில் கவனம் செலுத்துவார்கள்.

விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் ஆதரவு கூடும். கலைத்துறையினர் வேகத்தோடு விவேகமாகவும் பணிபுரிவார்கள்.

பெண்கள் குடும்பப் பொறுப்பை ஆற்றுவார்கள். மாணவர்கள் பிறருடன் நேர்மையாகப் பழகுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் இருந்த அழுத்தம் குறையும்.  சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலில் சிறிய முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் நேர்மையாக வியாபாரத்தை நடத்துவீர்கள்.

விவசாயிகள் சந்தையில் நிலவும் போட்டிக்கேற்றவாறு விலைகளை நிர்ணயித்து லாபத்தைப் பெருக்குவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் உண்டு.

கலைத்துறையினர் ரசிகர்களுக்கு உதவி செய்வார்கள். பெண்களுக்கு குழப்பங்கள் தீர, ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவார்கள்.

மாணவர்கள் சக மாணவர்களுக்கு உதவிகளைச் செய்வர்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வாழ்க்கை வளம் பெற எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். குடும்ப விவகாரங்கள் சாதகமாகவே செல்லும்.  உத்தியோகஸ்தர்களுக்குப் புகழ் அதிகரிக்கும்.

வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் முன்னேற்றம் காண்பர். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிப் பெறுவார்கள். அரசியல்வாதிகளின் செயல்கள் புதிய அனுபவத்தை ஈட்டிக் கொடுக்கும்.

கலைத்துறையினர் புதியவைகளைக் கற்றுக் கொள்ள அடித்தள மிடுவார்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வார்கள். மாணவர்கள் சக நண்பர்களிடம் நட்புறவை வைத்துக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

ஆன்மிகத்திலும் தெய்வீகத்திலும் நாட்டம் அதிகரிக்கும்.  மனதில் இருந்த சலனம் மறைந்து, தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவு ஏற்படாது. உங்களின் தனித்தன்மை வெளிப்படும். உத்தியோகஸ்தர்களின் பணிச்சுமை குறையும்.

வியாபாரிகள் சலுகை பொருள்களை விற்பனை செய்வார்கள். விவசாயிகள் புதிய முறையில் விவசாயம் செய்வார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் சென்று காரியமாற்றுவார்கள்.

கலைத்துறையினரின் திறன்கள் வெளிப்படும். பெண்களின் உயர்ந்த சிந்தனை வெளிப்படும். 

மாணவர்கள் நல்ல புத்தகங்களைப் படிக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நம்பிக்கையுடனும் சுறுசுறுப்புடனும் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும்.  பலரின் ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பணிகளின் தன்மைக்கேற்ப கால நேரங்களைப் புரிந்து, வாக்கு கொடுக்கவும். வியாபாரிகளின் புகழ் உயரும்.

விவசாயிகள் புதிய லாபத்தை ஈட்டுவார்கள். அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத்துறையினர் பண வருவாய் கூடக் காண்பார்கள்.

பெண்கள் சோம்பலை ஒதுக்கிவிட்டு, கடினமாக உழைப்பார்கள். மாணவர்கள் உறுதியுடன் இருந்து உயரிய இலக்குகளை எட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரம் படிப்படியாக உயரும். தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். கடன் வாங்க நேரிடாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பாராட்டு, கௌரவம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய இலக்குகளை எட்டுவார்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவார்கள். 

அரசியல்வாதிகள் ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து, கட்சிப் பணிகளில் ஈடுபடுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று வெற்றிப் பாதையில் செல்வார்கள்.

பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்வார்கள். மாணவர்கள் விளையாட்டில் சாதனைகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - 26.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் சில மாற்றங்களைச் செய்வார்கள்.  உத்தியோகஸ்தர்கள் பணியில் உள்ள இடையூறுகளைத் தாண்டி, மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

வியாபாரிகள் புதிய முதலீடுகளை மேற்கொள்வார்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குச் செலவிட நேரிடும்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை எளிதில் முடித்துவிடுவார்கள்.

கலைத்துறையினர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவார்கள்.

பெண்கள் பெற்றோருக்கு மருத்துவச் செலவு செய்ய நேரிடும். மாணவர்கள் விருப்பமான பாடங்களில் சேருவார்கள்.

சந்திராஷ்டமம் - 27,28.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பிரச்னைகளை எதிர்கொள்வீர்கள்.  வருமானம் படிப்படியாக உயரும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். 

உத்தியோகஸ்தர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள்.  வியாபாரிகளுக்கு புகழ் உண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக அமையும். 

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் பொறுப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் சிக்கல் எதுவுமிருக்காது.

பெண்கள்  குடும்பத்தினருடன் பாசத்துடன் பழகுவார்கள். மாணவர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - 29,30,31.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் திறமைக்கு வெகுமதிகள் உண்டாகும். வெளியூரில் நற்செய்தியொன்று வந்து சேரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் சில சலுகைகளை வழங்குவார்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வார்கள்.

விவசாயிகள் பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவார்கள். அரசியல்வாதிகளின்

செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் புதிய நுட்பங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.  பெண்கள் திருப்பணிகளுக்கு உதவி செய்வார்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை காட்டவும்.

சந்திராஷ்டமம் - 01.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com