காளிகாம்பாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

காளிகாம்பாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

சென்னை, பாரிமுனையிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நாளை தொடங்குகிறது.

சென்னை, தம்புச் செட்டித் தெருவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா 03.06.22 அன்று தொடங்குகிறது. 

குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது என்று புராணங்கள் கூறுகின்றது. மேலும், மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜி தன்னை சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார் என்பது வரலாறு. 

இவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்ட இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா 03.06.22 முதல் 12.06.22 வரை நடைபெற உள்ளது. நாளை இரவு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது.

பிரம்மோற்சவ காலங்களில் ஸ்ரீ அம்பாளின் மூர்த்தம் திருவீதிகளில் திருவுலா வருவதால் நாட்டு மக்கள் அனைவரும் ஸ்ரீ அம்பாளின் அருள்நோக்கால் சாம்வீ தீட்சை பெற்று இகபர சௌபாக்யங்களோடு வாழ்வார்கள் என்பது சான்றோர் வாக்கு.

10 நாட்கள் நடைபெறும் இந்தப் பிரம்மோற்சவ விழாவில் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு அன்னையின் அருளைப் பெறுவோமாக.

இவ்விழாவினை ஏற்பாடு செய்தவர்கள் அறங்காவலர் குழுத் தலைவர் பிரம்மஸ்ரீ எஸ்.சர்வேஸ்வரன் ஆச்சாரி மற்றும் அறங்காவலர்கள் பிரம்மஸ்ரீ கே.யுவராஜ் ஆச்சாரி, பிரம்மஸ்ரீ இஎம்எஸ்.மோகன் ஆச்சாரி, பிரம்மஸ்ரீ ஜே.ராமேஷ் ஆச்சாரி, பிரம்மஸ்ரீ ஆர்.சுப்ரமணி ஆச்சாரி ஆகியோர் ஆவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com