பதவி உயர்வு கிடைக்கப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
பதவி உயர்வு கிடைக்கப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

செய்தொழிலில் உடன் உழைப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளில் புதிய அனுபவம் பெறுவீர்.

உத்தியோகஸ்தர்கள் கவனத்துடன் பணிபுரிந்து நல்ல பெயர் எடுப்பார்கள். வியாபாரிகளுக்கு சிறிது அலைச்சல் கூடும். விவசாயிகள் புதிய விவசாய உபகரணங்களை வாங்குவார்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை சுறுசுறுப்பாக மேற்கொள்வார்கள்.  

கலைத்துறையினரின் நெடுநாளைய விருப்பம் நிறைவேறும். பெண்கள் குடும்பத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுமுகமான பாகப் பிரிவினை நடக்கும். குடும்பத்தாருடன் குல தெய்வ கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைக் குறித்த காலத்துக்குள் செய்து முடிப்பார்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமம் குறையும். விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தேடி பெறுவார்கள்.

அரசியல்வாதிகளின் தன்னம்பிக்கை கூடும். கலைத்துறையினர் எதிர்பாராத வாய்ப்புகளால் புகழடைவார்கள். பெண்கள் பொருளாதாரத்தில் மேன்மையைக் காண்பார்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நல்ல பெயரை எடுப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

முகத்தில் பொலிவும் தோற்றத்தில் மிடுக்கும் உண்டாகும். வெளியூரில் இருந்து அனுகூலமான செய்தி வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவார்கள்.

வியாபாரிகள் எதிர்வரும் பிரச்னைகளைச் சமாளிப்பார்கள்.  விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அரசியல்வாதிகள் எவரிடமும் அநாவசிய பேச்சுகளைப் பேசாமல் இருக்க வேண்டும்.

கலைத்துறையினருக்கு வருமானம் சீராக இருக்கும். பெண்கள் கணவரின் ஆதரவைப் பெறுவர். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துங்கள். மாணவர்கள் நல்ல பெயரைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

நினைத்ததை நினைத்தபடியே முடித்துவிடுவீர்கள். உடல், மன நலம் சிறப்பாக இருக்கும்.  வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகளுக்கு பண்ணை குத்தகைகளால் வருவாய் வரத் தொடங்கும்.

அரசியல்வாதிகள் உயர்ந்த நிலையை எட்டுவார்கள். கலைத்துறையினர் திறமையான புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள்.  மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் -  இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உத்தியோகஸ்தர்கள் நம்பிக்கையுடன் புதிய பயிற்சிகளைக் கற்றுக் கொள்வீர்.  வியாபாரிகள் பழைய கடன்களைத் திருப்பி அடைப்பார்கள்.

விவசாயிகள் கொள்முதலில் இருந்த பிரச்னைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பார்கள்.  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவர்.

கலைத்துறையினர் கவனமாக உழைத்து எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துவிடுவர்.  பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவர்.
சந்திராஷ்டமம் -  இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

போட்டிகளைக் கவனத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர். வேகத்துடனும், விவேகத்துடனும் செயலாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் திறமையுடன் பணியாற்றுவர்.  வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவார்கள். விவசாயிகள் அதிக விளைச்சலைக் காண்பர். பாசன வசதியையும் மேம்படுத்திக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகளுக்குப் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும்.

கலைத்துறையினர் சக கலைஞர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு அளித்து நடந்துகொள்வர். பெண்கள் குழந்தைகளுடன் சுற்றுலா சென்று வருவர். மாணவர்கள் படிப்பில் சாதனை புரிவர்.

சந்திராஷ்டமம் - 27,28.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

மனதில் இருந்த குழப்பங்கள் அகன்று தெளிவு பிறக்கும். உறவினர்களால் சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு ஏற்படாது.

உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைத்து நற்பெயர் எடுப்பார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.  விவசாயிகள் ஊடுபயிர்களைப் பயிரிட்டு கூடுதல் பலனை அடைவர்.

அரசியல்வாதிகளின் தன்னம்பிக்கை கூடும். கலைத்துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும். பெண்கள் இல்லத்தில் நிறைவைக் காண்பார்கள். பெற்றோர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மாணவர்கள் 
கடமையில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - 29,30,31.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

கவனத்துடன் செயலாற்றுவீர்கள்.  உறவினர்கள் விரும்பி வந்து குடும்பத்துடன் இணைவார்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனமறிந்து   பணியாற்றுவார்கள்.  வியாபாரிகளுக்கு வாழ்க்கைத் தரம் உயரும்.

விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களைப் பயிரிட்டு வருமானம் ஈட்டுவார்கள். அரசியல்வாதிகள் உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினர் புகழ் தரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்.

வருமானத்தில் மேன்மையைக் காண்பார்கள். குடும்பத்தாருடன் மனதுக்கு இனிய பயணம் மேற்கொள்வீர். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவார்கள்.
சந்திராஷ்டமம்} 1,2.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

மூத்தோர்கள் ஆதரவுடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.  துணிந்து செயல்படும் விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களால் வெற்றி பெறுவார்கள்.  வியாபாரிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடு
வீர்கள். அரசியல்வாதிகளுக்கு உழைப்புக்குத் தகுந்த பெருமை உண்டாகும்.  கலைத்துறையினரின் திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேறும். பெண்கள் உறவினர்களுக்கு உதவிகரமாகச் செயல்படுவார்கள். மாணவர்கள் ஆசிரியர்கள் சொல் கேட்டு நடப்பார்கள். படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய வியாபாரத்தைத் தொடங்குவார்கள்.

விவசாயிகள் பயிர் விளைச்சலில் உயர்வைக் காண்பார்கள். அரசியல்வாதிகளின் எண்ணங்கள் நிறைவேறும். கலைத்துறையினரின் பயணம் வெற்றியைத் தேடித் தரும்.

பெண்கள் குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து நடப்பர். கணவருடன் அன்போடு பழகுவர்.  மாணவர்கள் ஏற்றமான எதிர்காலத்துக்கு அடித்தளமிடுவார்கள். 
சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொறுமையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டு காரியமாற்றுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் கௌரவம், அந்தஸ்து கூடும். உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்-வாங்கல் சீராகத் தொடங்கும்.  

விவசாயிகள் படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் திட்டமிட்டு பணியாற்றுவார்கள். கலைத்துறையினரின் விருப்பங்கள் நிறைவேறும். அந்தஸ்து  உயரத் தொடங்கும்.

பெண்கள் பொருளாதாரத்தில் உயர்வைக் காண்பார்கள். மாணவர்கள் அனைவரிடமும் அனுசரித்து நடந்துகொண்டு நல்ல பெயரை எடுப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பலவகைகளில் பணம் வந்து சேரும். கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் சிந்தித்து செயல்படுவீர்கள். வியாபாரிகள் சகஜமாகப் பழகுவார்கள். விவசாயிகள் பாசன வசதிகளுக்குத் தேவையான முயற்சிகளைச் செய்வீர்கள். அரசியல்வாதிகள் கடுமையாக உழைப்பார்கள்.

புதிய பொறுப்புகளும் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய பொறுப்புகளைப் பெறுவர். பெண்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்த எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும்.

மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com