திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கேரளத்தில் மிகவும் முக்கியத் திருவிழாவான பூரம் திருவிழா, பழமை வாய்ந்த திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பூரம் நட்சத்திரம் அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்தவகையில், விழாவில் நேந்நு அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. காலை 7.30 மணிக்கு கணிமங்கலம் சாஸ்தா கோயில் உற்சவர் எழுந்தருளி ஏழு யானைகளின் அணிவகுப்புடன் தெற்கு கோபுர நடை வழியாக நுழைந்து வடக்கு நாதரை வணங்கி மேற்கு கோபுர நடை வழியாக வெயில் வந்தார்.

இதையடுத்து பஞ்சவாத்தியம் உள்ளிட்ட பல்வேறு மேளங்கள் இசைக்கப்பட்டன. மிகவும் பிரபலமான இலஞ்சித்தறை மேளம் என அழைக்கப்படும் செண்டை மேளம் இசைக்கப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

மூன்று மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துகொண்டு பரவசமடைந்தனர். அதன்பின்னர், வடக்குநாதர் கோவில் தெற்கு கோபுரம் வழியாக, பாரமேக்காவு பகவதி கோியில் யானைகள் வெளியே வந்து சக்தன் தம்புரான் மன்னரை வலம் வந்து வடக்குநாதர் கோவில் தெற்கு கோபுர நடை வாயிலை நோக்கி நின்றன.

இதையடுத்து 5.30 மணிக்கு 30 கோயில் யானைகளின் மீதும் அமர்ந்திருந்தவர்கள் முத்துமணி மாலையுடன் கூடிய வண்ணக் குடையை மாற்றினர். இருதரப்பினர் போட்டிபோட்டு நடத்திய குடைமாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். விழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com