தினம் ஒரு தேவாரம்

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 10

அருள் புரிகின்றார்

25-11-2019

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 9

வல்லமை வாய்ந்தவர்

24-11-2019

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 8

உய்வினை அடையலாம்

23-11-2019

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 7

சடையினில் பிறைச்சந்திரனை

22-11-2019

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 6

தேவியையும் திருமாலையும்

21-11-2019

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 5

பல்லில் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
எல்லி ஆட்டுகந்தார் இவர் தன்மை அறிவாரார்

20-11-2019

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 4

பண்ணில் யாழினர் பயிலும் மோந்தையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அண்ணலா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்

19-11-2019

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 3

பவளம் போல் மேனியில்

18-11-2019

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 2

அனைவர்க்கும் தலைவன்

17-11-2019

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 1

பல தேவாரப் பாடல்கள்

16-11-2019

144. அடையார்தம் புரங்கள் - பாடல் 11

சிவனடியார்களிடம் இருக்க

15-11-2019

144. அடையார்தம் புரங்கள் - பாடல் 10

உடுக்கை வாத்தியம்

14-11-2019

தினம் ஒரு தேவாரம்

பல சங்க இலக்கியங்களில், கடவுள் வாழ்த்துப் பகுதியிலும், மற்ற பல இடங்களிலும், சிவபெருமானைப் பற்றிய குறிப்பு காணப்பட்டாலும், முழுவதும் சிவபெருமானின் புகழை எடுத்துரைக்கும் நூல்கள் ஏதுமில்லை.

சமண, புத்த சமயங்கள் ஓங்கி நின்று, இந்து சமயம் நலிவுற்ற நிலையில், சைவ சமயம் தழைத்தோங்க, இறைவனின் அருளால், கி.பி. ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுந்தவை தேவாரப் பாடல்கள். இறைவனுக்கு சூட்டப்பட்ட சொல் மாலைகள் என்ற பொருள் பட, தேவாரம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்தப் பாடல்கள், திருஞானசம்பந்தர், அப்பர் என்கிற திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் அருளப்பட்டன.

இவர்கள் ஒவ்வொருவரும், ஆயிரக்கணக்கில் பாடல்கள் அருளினார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால், தேவாரப் பாடல்களை சிதம்பரம் திருக்கோயிலில் நம்பியாண்டார் நம்பி கண்டெடுத்தபோது, மிகவும் குறைவான பாடல்களே கிடைத்தன. எஞ்சியவை செல்லரித்துக் காணப்பட்டன. கிடைத்த தேவாரப் பதிகங்களை, பாடல்களுக்கு உரிய பண்ணின் முறைப்படி, முதல் ஏழு திருமுறைகளாக அவர் வகுத்தார்.

திருஞானசம்பந்தர் அருளிய 383 பதிகங்கள் (4147 பாடல்கள் கொண்டவை), முதல் மூன்று திருமுறைகளாகவும், அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அருளிய 312 பதிகங்கள் (3065 பாடல்கள் கொண்டவை) நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் திருமுறைகளாகவும், சுந்தரர் அருளிய 100 பதிகங்கள் (1026 பாடல்கள் கொண்டவை) ஏழாம் திருமுறையாகவும், வகுக்கப்பட்டன.

பின்னர் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் (எட்டாம் திருமுறை), திருவிசைப்பா திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை) திருமந்திரம் (பத்தாம் திருமுறை), காரைக்கால் அம்மையார் போன்றோர் அருளிய பல வகையைச் சார்ந்த பாடல்கள் (பதினோராம் திருமுறை), பெரிய புராணம் (பன்னிரண்டாம் திருமுறை) என்று சேர்க்கப்பட்டு, இந்த சைவ இலக்கியங்கள் ‘பன்னிரு திருமுறை’ என்று பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றன.

கருத்தாழம் மிக்க தேவாரப் பாடல்களை, பொருள் உணர்ந்து அனைவரும் பாட வேண்டும் என்ற எண்ணத்தில், தினம் ஒரு தேவாரப் பதிகம் என்ற இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடல்களின் எளிய பொருள்கள், தேவையான இடங்களில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு, தினமும் ஒரு தேவாரப் பாடலாக வெளியிடப்படுகிறது. பொருள் விளக்கக் குறிப்புடன், பாடலின் ஒலிக்கோப்பும் இடம்பெறும்.

என். வெங்கடேஸ்வரன்

என். வெங்கடேஸ்வரன்

என். வெங்கடேஸ்வரன். வயது 66. சென்னையைச் சேர்ந்த இவர், பட்டம் முடித்து, சென்ட்ரல் வங்கியில் சுமார் 38 ஆண்டுகள் பணியாற்றி, முதுநிலை மேலாளராக (Senior Manager) ஓய்வு பெற்றவர். சிறுவயதில் இருந்தே திருப்புகழ், தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தவர். பணிஓய்வுக்குப் பின், பன்னிரு திருமுறைகளைப் பொருளுடன் அறிந்துகொள்வதற்கு முயற்சி செய்து, தான் அறிந்த செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். கடந்த ஆறு வருடங்களாக, உழவாரப் பணி, திருவாசகம் முற்றோதல், அடியார் இல்லங்களில் திருமுறை வழிபாடு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். இவரைத் தொடர்புகொள்ள – 044-24811300, 9841697196. இமெயில் - damalvenkateswaran@gmail.com

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை