மூடுபனி

கலகலப்பாக ஆரம்பிக்கப்பட்டுக் கண்ணீரோடு முடிக்கப்பட்ட படம் என்று பாலு மகேந்திராவால் குறிப்பிடப்பட்ட
மூடுபனி

கலகலப்பாக ஆரம்பிக்கப்பட்டுக் கண்ணீரோடு முடிக்கப்பட்ட படம் என்று பாலு மகேந்திராவால் குறிப்பிடப்பட்ட மூடுபனி படமும் கண்ணீரில்தான் முடிகிறது. ஆனால் கவிதையாகத் துவங்குகிறது.

கதை, ஏற்கனவே வெளியாகிவிட்ட பலவீனத்தை, பாலுமேந்திராவின் இணையற்ற ஒளிப்பதிவு மறைக்கிறது. அதோடு டி.வாசுவின் எடிட்டிங்கும் சேர்ந்து விறுவிறுக்கச் செய்கிறது.

தன்னுடைய கடைசிக் கட்டத்தை உணர்ந்து விட்டதால் தானோ என்னவோ ஷோபா இதில் அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

பிரதாப்புக்குப்பார்ப்பவர்கள் மனத்தில் பரிதாப உணர்ச்சியை ஏற்படச் செய்யும் கதாபாத்திரம். கலங்க வைத்து விட்டார் கடைசிக் காட்சியில்.

போலீஸ் அதிகாரி ரகுநாத்தின் அதிகார தோரணை, கண்களிலேயே தெரிகிறது என்.விஸ்வநாதனுக்கு. (ஆமாம் போலீஸ் துறையினருக்கு தன் ஊரில் ஒரு விபச்சார விடுதி இருப்பது கூடவா தெரியாது?)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com