அவசரமா ஆம்பளையாகணும்னு அரிப்பு எனக்கு அதிகமா இருந்தது - கமலஹாசன்

டீன் ஏஜ் கனவுகள் - கமலஹாசன்
அவசரமா ஆம்பளையாகணும்னு அரிப்பு எனக்கு அதிகமா இருந்தது - கமலஹாசன்

டீன் ஏஜ் காலம்கிறது ஒரு உல்லாசமான கட்டம்.பொதுவா  இந்த வார்த்தை பெண்களுக்காக சொல்லப்பட்டாலும், ஆண்களுக்கும் இது நூறு சதவீதம் பொருந்தும். குழந்தை பருவத்துலருந்து விலகி வாலிபத்தில் அடியெடுத்து வைக்கிற ப்ப ஏற்படற இனம்புரியாத பரபரப்பும் வியப்பும் எதிர்பார்ப்பும் பிரமையும் சொல்லிப் புரிய வைக்க முடியாத சுகமான அனுபவங்கள்.

ஜனிச்சதுல இருந்து நாலு வயசு வரைக்கும் அம்மாதான் உலகம்.ஒரு பீரியட்ல அம்மா கொஞ்சமாய் விலக பாலைவனமா பாழ்வெளியா வனாந்தரமா காலம் ஆரம்பமாயிடுது.   பாலை உறிஞ்சி குடிக்கிற சுவாதீனமும் சுவாரஸ்யம் போய் சுற்றுப்புறம் சூழ்நிலையில் லயிப்பு ஏற்படுது.  

டீன் ஏஜ் பருவத்துல பொதுவா எதிர் பருவத்தின் மேல் ஏற்படற ஈர்ப்பு என்னைப் பொறுத்தவரையில் அட்வான்சாகவே வந்துவிட்டது. ஆறு ஏழு வயசுல பெண்கள் மேல எனக்கு ஈர்ப்பு ஏற்பட ஆரம்பிச்சுது. இதைச் சொன்னா "ஆறு வயசுல அந்த ஆசையாம்; கதைவிடறான் பாரு கமலஹாசன்"அப்டினு கேலி பண்ணுவாங்க. அதான் உண்மை. என் ஆசையெல்லாம் பெண்கள் மேல இல்லை. பெண்மணிகள் மேலதான்.'செல்வி, உன் சீதனம் இந்த கையலகம் தானே' பின்னாளில் கவிதை எழுதின காலம் நினைவுக்கு வருது.அந்த ஸ்டேஜ்ல பத்மினி  ராகினி மேல அவ்வளவு க்ரேஸியா இருந்தேன்.சிவாஜி எம்.ஜி.ஆரோட பத்மினி  நடிக்கிறத பாத்து பாத்து ஒரு ஸ்டேஜ்ல சிவாஜி எம்.ஜி.ஆர் ஒதுங்கி பத்மினியோட  நாயகனா கட்டியணைக்கிற மாதிரி நானே நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இந்த உணர்வை சட்டுன்னு புரிய வைக்க முடியாது. இதை ஓரளவுக்கு புரிய வைக்கணும்னா இப்படிச் சொல்லலாம் "அவசரமா ஆம்பளையாகணும்னு அரிப்பு எனக்கு அதிகமா இருந்தது"   

ரெண்டு ஜெனரேஷன் போய் இன்னைக்கு அதே பத்மினியை நான் பத்மினி அம்மான்னுதான் கூப்பிடுறேன்.ராக்கியோட கூட நடிக்கிறேன். திரையில தள்ளி நின்னு பாத்த நிழல் நிஜமா பக்கத்துல நிக்கிறப்ப என்ன பேசமுடியும் அவங்க கூட? ஊர்க் கதையெல்லாம் பேசி பேசி சலித்து வெட்டியா அரட்டையடிச்சுக்கிட்டு உக்காந்திருப்பேன்.  

டைட்டஸ் போட்டுக்கிட்டு ஸ்டையிலா நடந்து 'ட்ரைவ்-இன்' ல ஒரு காப்பி சாப்பிட்டு அங்க வர்ற பெண்களை ரசிக்கிறது சில்லறைத்தனமா கமெண்ட் அடிக்கிறது இதெல்லாம் ரொம்ப ஷார்ட் பீரியட்தான் என்கிட்டே இருந்தது.

பாத்ரூம்ல உக்காந்திருக்கிற கொஞ்ச நேரம்தான் எனக்கு ரொம்ப பிடிச்ச நேரம்.  எனக்கு பிடிச்ச பெண்களை பிடிச்ச கோணத்துல கண்ணைச் சுருக்கி என்னால ரசிக்க முடிஞ்ச இடம் அதுதான். யாருடைய குறுக்கீடும் தொந்தரவும் இல்லாம மானசீகமா அதுல லயிச்சு போறதும் அந்த நேரம்தான். அதுக்கப்புறம் என்னோட நாள் ரொம்ப சந்தோசமா ஆரம்பிக்கும்.  

சந்திப்பு: உத்தமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.02.84 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com