ஆராய்ச்சிமணி

அபாயகரமான சாலை...

சென்னை முகப்பேர் வாவின் மேம்பாலம் அருகில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் ஒருபுறம், அருகில்  பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெறுவதால் ஆபத்தான  நிலையில் உள்ள கம்பிகள் மறுபுறம்.

17-06-2019

கழிப்பறை தேவை

அடையாறு இந்திரா நகரிலிருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

17-06-2019

ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு...! 

திருவெற்றியூர் ரயில் நிலையத்தின் முன் பகுதி இடிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் குறிப்பாக முதியவர்கள் பயணச்சீட்டு வாங்குவதற்காக மாட்டுமந்தை கேட் பகுதிக்கு மேடு பள்ளங்களைக் கடந்து செல்கின்றனர்.

17-06-2019

சாலை சீரமைக்கப்படுமா?

பெருநகர சென்னை மாநகராட்சி  மண்டலம்-3, வட்டம்-29 -க்கு உள்பட்ட  அவுரி கொல்லைமேடு பகுதியில் உள்ள முனுசாமி தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக  கடந்த 2016 -ஆம் ஆண்டில் பள்ளம் தோண்டப்பட்டது.

17-06-2019

நடுத்தெருவில் மாடுகளை கட்டி ஆக்கிரமிப்பு

சென்னை உள்ளகரம் புழுதிவாக்கம்  மாநகராட்சி அலுவலகம்  எதிரே உள்ள ராஜேஸ்வரி நகர் பிரதான சாலையில் சிலர் மாடுகளை நடுத் தெருவில் கட்டு வைத்து பால் கறந்து வியாபாரம் செய்கின்றனர்.

17-06-2019

வேகத்தடை வேண்டும்

நங்கநல்லூர் முதலாவது பிரதான சாலையிலிருந்து பக்கவாட்டில் பிரிந்து செல்லும் 24-ஆவது தெரு சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைத்தால் பாதசாரிகள் முதலாவது பிரதான சாலையைக் கடந்து செல்ல முடியும்.

17-06-2019

குடிநீர் தட்டுப்பாடு

சைதாப்பேட்டை மசூதித் தோட்டம்பகுதி எட்டு குறுக்குத் தெருக்களைக் கொண்டது. இங்கு கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

17-06-2019

மாநகராட்சி கவனிக்குமா?

சென்னை பெரு மாநகராட்சி 10-ஆவது மண்டலம், 137-வது வார்டு, 61-ஆவது தெருவில் மாநகராட்சி சார்பில் சிறுவர்கள் விளையாட்டுத் திடல் ஏற்படுத்தப்பட்டது. பக்கத்தில் பூங்கா அமைக்கப்படவில்லை.

17-06-2019

கோயம்பேடு - சைதாப்பேட்டைக்கு நேரடி  பேருந்து வசதி தேவை

தென் சென்னையின் இதயப் பகுதியாக விளங்கும் சைதாப்பேட்டையில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு  தற்போது நேரடிப் பேருந்து வசதியில்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

17-06-2019

குடிநீர் குழாயை  சீரமைக்க வேண்டும்

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் காந்தி நகர் 10-ஆவது தெருவில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

17-06-2019

சீராக இயக்கப்படுமா தடம் எண் எம்-14 பேருந்து...!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து மேடவாக்கம் சாலை சந்திப்பு வரை இயக்கப்படும் தடம் எண் எம்-14 கிரீன் போர்டு பேருந்துகள் சீரான கால இடைவெளியில் இயக்கப்படுவதில்லை.

17-06-2019

வேண்டும் அறிவிப்புப் பலகை

திருவொற்றியூரில் இருந்து வேளாங்கனிக்குச் செல்லும் அரசுப் பேருந்து, இரவு 8.15 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.

03-06-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை