சுவாமிஜி வளர்த்த பத்திரிகைகள்!

பிரம்மவாதினின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. மதத்தைப் பற்றியும் தத்துவங்களைப் பற்றியும் போதிய அறிவு உடையவர்களே அதனைப் படித்து புரிந்து கொள்ள இயலும்.
சுவாமிஜி வளர்த்த பத்திரிகைகள்!

பிரம்மவாதினின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. மதத்தைப் பற்றியும் தத்துவங்களைப் பற்றியும் போதிய அறிவு உடையவர்களே அதனைப் படித்து புரிந்து கொள்ள இயலும். ஆனால் ஸ்ரீராம கிருஷ்ணர், சுவாமிஜி, மற்ற தத்துவ அறிஞர்கள் போன்றோரின் கருத்துக்கள் சாதாரண மக்களையும் சென்று அடைய வேண்டும் என்று விரும்பினார் அளசிங்கர். ஏனெனில் சாதாரண மக்களை அணுகுவது சுவாமிஜியின் ஒரு முக்கிமான நோக்கமாக இருந்தது. டாக்டர் நஞ்சுண்ட ராவிடம் கலந்தாலோசித்து, இன்னொரு பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்று சுவாமிஜியிடம் அனுமதி கோரினார் அளசிங்கர். சுவாமிஜிக்குப் புதிய பத்திரிகை ஆரம்பிப்பதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. ஏனினும் இளைஞர்களின் உற்சாகத்திற்கு அனை போட வேண்டாம் என்பதற்காக இசைவு தந்தார். இந்தப் பத்திரிகைக்கு 'பிரபுத்த பாரதம்' என்று பெயர் வைக்கப்பட்டது. இதுவும் ஆங்கில மாத இதழ். இளைஞரும் பேரறிஞருமான பி.ஆர். ராஜம் ஐயர் அதன் ஆசிரியர் ஆனார். பிரம்மவாதின் அச்சிடப்பட்ட அதே ஆசிரியர் ஆனார். பிரம்மவாதின் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் பிரபுத்த பாரதமும் அச்சிடப்பட்டது. 1896 ஜூலையில் அதன் முதல் இதழ் வெளி வந்தது. அந்த நாட்களிலேயே இதற்கு 3,000 சந்தாதாரர்கள் இருந்தார்கள்.

டாக்டர் நஞ்சுண்டராவ் குழந்தைகளுக்காக ஒரு பத்திரிகை ஆரம்பிக்க விரும்பினார். அவரது பணியை உற்சாகப்படுத்தி சுவாமிஜி எழுதினார். சிறுவர்களுக்கான உங்கள் பத்திரிகைத் திட்டத்தை நான் பூரணமாக ஆமோதிக்கிறேன், அதற்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அது வேறு எதையும் சாராததாகச் செய்ய வேண்டும். சம்ஸ்கிருத இலக்கியம் முழுவதிலும் சிதறிக் கிடக்கின்ற அற்புதக் கதைகளை மீண்டும் எழுதி மக்கள் ரசிக்குமாறு செய்வதற்குப் பெரிய வாய்ப்பு உள்ளது.

அந்த வாய்ப்பு உங்கள் கற்பனைகளையெல்லாம்விட பிரமாதமானது. உங்கள் பத்திரிகையின் ஒரு சிறப்பம்சம் அது. நேரம் கிடைக்கும்போது நானும் எத்தனை முடியுமோ அத்தனை கதைகள் எழுதி அனுப்புகிறேன்.' 'விந்தை உலகில் ஆலிஸ்' போன்ற ஒரு சிறுவர் நூலைத் தாமே எழுதவும் விரும்பியிருந்தார் சுவாமிஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com