ஆறோடும் நீரோடும்: பூ.சுப்ரமணியன் 

அன்று
வாடிய பயிரை
கண்டபோதெல்லாம்
வாடினார் வள்ளலார் !

இன்று 
வளமான நீரின்றி
வாடிய பயிரைக் கண்டு  
எண்ணி எண்ணி ஏங்கி
வாடி நிற்கிறான் விவசாயி !

வாடிய பயிருக்கு 
எப்போது 
ஆறோடும் நீரோடும் ?

அன்று 
மண்ணோடும் மாட்டோடும்
மகிழ்ந்த விவசாயிகள்
இன்று 
காவிரிநதி நீருக்காக  
போராடி போராடி- அவன் 
நிலங்கள் மட்டுமல்ல 
அவன் வாழ்வும் வறட்சி !

பசி வந்தால் பத்தும் 
பறந்து போகும் – அந்த
பசியாற்றும் விவசாயி
காஞ்ச வயிற்றோடு 
காவிரிநதி நீருக்காக 
கண்ணீரோடு போராடியும்
கைவிரித்தது கர்நாடகம் !

நாட்டில் ஓடும் 
நதிகளெல்லாம் விரைவில் 
தேசியமயமாக்கி
விதி கொண்டு வந்தால் 
யாரோடும் கெஞ்ச வேண்டாம் 
ஆறோடும் நீரோடும் 
போராடும் விவசாயிகளின்
வாடும் முகம் மட்டுமல்ல 
நாட்டு மக்களின் வாழ்வும்
விரைவில் மலரும் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com