பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: பொன்.இராம்

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்
மரங்கள் குளித்த மழை நீரில்
சிடுக்கெடுக்கும் ஒற்றைக்குயிலின்
இனியகானம் கேட்க
பள்ளி செல்லும் பிஞ்சு மனங்களுக்கு
நேரமில்லை!

இயற்கை வரைந்த சன்னல் ஓரத்து
 மழைநீர் ஓடையை இரசிக்க
பிஞ்சு மனங்களுக்கு நேரமில்லை!

செல்ல மழையின் வெள்ளிக்கம்பி
அருவி ஓசையில் நனைய
பிஞ்சு மனங்களுக்கு ஆசை!

பாடத்திட்டம் வகுத்த
வருங்காலப் பணக்காரன்
மோகத்தில் தொலைந்ததென்னவோ
பிஞ்சுமனங்களின் இனிய கனவுகள்!

செல்ல மழையே!
ஏரி,குளம்,ஆறு,கிணறு அளவாய்ப்
பொழிந்து பிஞ்சு மனங்களின்
மனம் நிறைய புயலாய்
உருவெடுத்து விடுப்பளிக்க
வரந் தருவாயா
என்ற ஆவலில் செல்ல பிஞ்சுகள்
காத்திருக்கின்றன!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com