யுத்தம்  செய்யும்  கண்கள்: பாவலர்  கருமலைத்தமிழாழன்

பாசத்தைப்  பொழிவதுதான்  தாயின்  கண்கள்            பாதைமாறிப்   பிள்ளைகள்தாம்   போன  போதும்நேசத்தைக்   காட்டிமனம்   திருந்து   மாறு            நேயத்தில்  வருடுவது   தாயின்  கண்கள் !வாசத்தைக்  கொண்டுமலர்   எதுவாம்  என்று            வாடிக்கை யாளர்கள்   அறிதல்  போன்றுவேசத்தால்   மறைத்தபோதும்   பிள்ளை   கண்ணில்            வேதனையைக்   கண்டறியும்  தாயின்  கண்கள் !அன்புதனைக்   காட்டியுச்சி   மோந்த  போதும்            அறம்புறழ்ந்து  பிள்ளைகள்தாம்   செல்லும்  போதுவன்புலியின்  சீற்றத்தைப்   பார்வை  யேற்றி            வதைத்தறிவு   புகட்டுவது   தந்தை   கண்கள் !முன்பின்னே  பிறந்திட்ட   அக்கா  தங்கை            மூத்தவனோ   இளையவனோ  உடன்பி  றந்தோர்நன்றாகத்  தம்பிவாழ்ந்தால்   காழ்ப்பைக்   காட்டி            நனிபகையாய்  நஞ்சுகொட்டும்  அவர்கள்  கண்கள் !துன்பத்தைத்  தூளாக்கிக்  காமம்  தன்னில்            துவளவைக்கும்  மனைவியவள்  காதல்  கண்கள்இன்பத்தை   அள்ளியள்ளி   எடுத்த  ளிக்கும்            இனிமையான   சிரிப்புதனில்   குழந்தைக்   கண்கள் !இன்றைக்கும்   தமிழினத்தின்   வேரைத்  தேடி            இல்லாமல்  ஆக்குதற்கே   இலங்கை   மண்ணில்வன்மத்தை  விதைத்துவிட்ட   இராச  பக்சே            வன்நெஞ்சன்   கண்கள்தாம்   யுத்தக்   கண்கள் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com