வெல்லும் சொல்: கவிஞர் இரா. இரவி

வெல்லும் சொல்லை எப்போதும் பயன்படுத்துங்கள்வெல்வார்கள் சாதிப்பார்கள் வளரும் குழந்தைகள் !அவச்சொல் என்றும் எப்போதும் சொல்லாதீர்கள்அதிர்வலைகளை ஏற்படுத்தும் தோல்வியில் வீழ்த்தும் !ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்என்பது பொன்மொழி மட்டுமல்ல உண்மையாகும்!மனதார வாழ்த்துங்கள் மற்றவரைப் பாராட்டுங்கள்மனதில் நல்லதை மட்டுமே எப்போதும் நினையுங்கள்!எதிர்மறை எண்ணமும் சொல்லும் வேண்டாம்எதிலும் உடன்பாட்டுச் சிந்தனையே இருக்கட்டும் !உன்னால் முடியாது என ஒருபோதும் சொல்லாதீர்கள்உன்னால் முடியுமென்று உடன் ஊக்கப்படுத்துங்கள் !உருப்பட மாட்டாய் என்று உச்சரித்தல் கூடாதுஉருப்பட வழி சொல்லி பயிற்றுவியுங்கள் !எதற்கும் இலாயக்கு இல்லை என்று என்றும்யாரையும் திட்டுடதல் கூடவே கூடாது !முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லைமுயற்சி செய்திட ஊக்கம் தாருங்கள்!வளமாக வருவாயென வாயார வாழ்த்துங்கள்வையகம் போற்றும் வண்ணம் சிறப்பார்கள் !நல்ல சொற்கள் நல்ல அதிர்வை உண்டாக்கும் நல்ல பலன் தரும் அறிவியல் உண்மையாகும் !எண்ணம் சொல் செயல்  நல்லதாக இருக்கட்டும் !எண்ணியது எண்ணியபடி இனிதே நடக்கும்!கோபம் வந்தாலும் யாருக்கும் சாபம் தராதீர்கள் !கோபம் தணித்து என்றும் இன்சொல் பேசுங்கள்!சிந்திய பொருளை உடன் அள்ளி விடலாம்சொல்லிய சொல்லைத் திரும்பப் பெற முடியாது!கனியிருப்பக் காய் கவர்ந்தற்று வள்ளுவன் வாக்குகட்டாயம் அனைவரும் கடைபிடித்தல் சிறப்பு !ஊக்கச் சொல்லால் உயர்ந்தோர் பலர்உதடு உச்சரிப்பதில் செல்வல்ல வரவு தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com