கவிதைமணி

கவிதை என்பது காலத்தின் கண்ணாடி. மொழிநடையும், நயமும், பொருளும் சேர்ந்த கவிதைகளைப் படிக்கப் படிக்க பரசவம் ஏற்படுவது உண்மை. ஒரு காலகட்டத்தை வார்த்தைகளால் சிறைப்பிடிக்க முடியும் என்றால், அது கவிதையால் மட்டுமே சாத்தியம்.

சங்க காலத்தில் தமிழர் வாழ்ந்த அற்புதமான வாழ்க்கையை காலத்தால் அழியாத கவிதைகளாகவும் காவியங்களாகவும் அன்றைய புலவர்கள் எழுதி வைத்துச் சென்றதால்தான், இன்று நாம் படித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்நியர் கரங்களில் நம் பாரத அன்னை சிறைப்பட்டுக் கிடந்தபோது, நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கவிதை வரிகள், சோம்பிக் கிடந்த உள்ளங்களை வீரம் கொண்டு எழுச் செய்தது. கம்பன் முதல் வைரமுத்து வரை சொற்களால் கட்டிய கவிதை உலகம் வியக்கத்தக்கது.

கவின் மிகு வார்த்தைகளால் கற்றல் என்பதும் எளிமையாகிறது. கவிதை என்பது அழகியல்; கவிதை என்பது இலக்கியத்தின் கண்கள்; கவிதை என்பது ரசனையின் உச்சம்; கவிதை என்பது வாள்வீச்சு. ஆனால், சமீபகாலமாக கவிதையின் வீச்சு குறைந்து வருகிறது. கவிதையில் சொற்சிக்கனம் இருக்கலாம். ஆனால், கவித்துவம் இல்லாமல் வார்த்தைகளின் புலம்பலாக அது இருந்துவிடக்கூடாது. இதுதான் கவிதை என்று இலக்கணம் வகுக்க முடியாது. கவிதையை எவ்வித வரம்புக்குள்ளும் அடைக்கவும் கூடாது. அது ஒரு மனநிலை.

தினமணி டாட் காம் வாசகர்களின் அத்தகைய மனநிலையைப் படம்பிடித்து வெளியிடத் தயாராக இருக்கிறோம். கவிதைமணி என்ற இந்தப் பகுதி, முழுக்க முழுக்க கவிதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் தங்களுடைய கவிதைகளை இங்கே மற்றவர்களுக்குப் படைக்கலாம். புதுக் கவிதை, மரபுக் கவிதை, ஹைக்கூ எந்த வகையாக இருந்தாலும், நாங்கள் சொல்லும் தலைப்புக்குள் ஒரு கவிதையை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள், ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று தொகுத்து வெளியிடப்படும். எழுதியவர் விரும்பினால், அவருடைய புகைப்படம் மற்றும் தொடர்புக்கான தகவல்களும் வெளியிடப்படும். இது உங்கள் தளம். ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். இந்தக் கவிதைப் பயணத்தில் ஒவ்வொரு வாரமும் எங்களுடன் இணைந்திடுங்கள். தளத்தில் கவிதைகள் வெளியாகவில்லை எனில் கவலைப்பட வேண்டாம். உங்கள் படைப்புகளை அனுப்பிக்கொண்டே இருங்கள். அடுத்தடுத்த வாரங்கள் உங்களுடையதாகக்கூட இருக்கலாம்.

கவிதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - kavidhaimani@gmail.com

கவிதைமணி

'மதுரை’ வாசகர் கவிதை பகுதி 2

முதுமூப்பு மூதூராய் மதுரை என்னும் மாமதுரை நம்நாட்டின் மரபுச் சின்னம்..!

16-10-2019

man
இந்த வாரம் கவிதைக்கான தலைப்பு: யார் மனிதன்?

கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..! 

16-10-2019

'மதுரை’ வாசகர் கவிதை பகுதி 3

பிழைபுரிந்த மன்னனுயிர் துறந்த ஊராம் எட்டுதிக்கும் தெரியுமாறு உயர்ந்து நிற்கும்

16-10-2019

மதுரை மீனாட்சி
இந்த வாரம் கவிதைக்கான தலைப்பு: மதுரை!  

கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..!

09-10-2019

வாசகர் கவிதை சாம்பலாய் முடியும் உடல் பகுதி 1

அவனியில் அவதரிக்க ஆண்டவன் அனுப்பிய

09-10-2019

சாம்பல் நிறப் பூனை
சாம்பலாய் முடியும் உடல் வாசகர் கவிதை பகுதி 3

சாம்பலாக மாறிய பின்னர் மீண்டும் உயிர்த்து எழ மனிதன் என்ன பீனிக்ஸ் பறவையா?

09-10-2019

சாம்பலாய் முடியும் உடல் வாசகர் கவிதை பகுதி 2

உதாசீனப்படுத்திய படியே வாழ்க்கை எனும் பயணம்தனில் ஓடிக் கொண்டிருந்தால்

09-10-2019

மகாத்மா காந்தி வாசகர் கவிதை பகுதி 1!

உப்பென்றும் சீனியென்றும் உள்நாட்டுச் சேலையென்றும் செப்பித் திரிந்தோர்க்கு செயலில் வழிகாட்டி

02-10-2019

இந்த வாரம் கவிதைக்கான தலைப்பு சாம்பலாய் முடியும் உடல்  

கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி

02-10-2019

மகாத்மா காந்தி வாசகர் கவிதை பகுதி 2

இந்திய விடுதலை போரை முன்னெடுத்த போர்பந்தர் போவீரரே

02-10-2019

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி வாசகர் கவிதை பகுதி 3

அறத்தின் தலைவர், அகிம்சையில் ராஜகுரு, அவனியெங்கும் புகழ்பெற்ற ஞானி!

02-10-2019

காந்தி நினைவு ஐ.நா. தபால் தலை | நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்
இந்த வாரம் கவிதைக்கான தலைப்பு மகாத்மா காந்தி!

​கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி

25-09-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை