கவிதைமணி

கவிதை என்பது காலத்தின் கண்ணாடி. மொழிநடையும், நயமும், பொருளும் சேர்ந்த கவிதைகளைப் படிக்கப் படிக்க பரசவம் ஏற்படுவது உண்மை. ஒரு காலகட்டத்தை வார்த்தைகளால் சிறைப்பிடிக்க முடியும் என்றால், அது கவிதையால் மட்டுமே சாத்தியம்.

சங்க காலத்தில் தமிழர் வாழ்ந்த அற்புதமான வாழ்க்கையை காலத்தால் அழியாத கவிதைகளாகவும் காவியங்களாகவும் அன்றைய புலவர்கள் எழுதி வைத்துச் சென்றதால்தான், இன்று நாம் படித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்நியர் கரங்களில் நம் பாரத அன்னை சிறைப்பட்டுக் கிடந்தபோது, நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கவிதை வரிகள், சோம்பிக் கிடந்த உள்ளங்களை வீரம் கொண்டு எழுச் செய்தது. கம்பன் முதல் வைரமுத்து வரை சொற்களால் கட்டிய கவிதை உலகம் வியக்கத்தக்கது.

கவின் மிகு வார்த்தைகளால் கற்றல் என்பதும் எளிமையாகிறது. கவிதை என்பது அழகியல்; கவிதை என்பது இலக்கியத்தின் கண்கள்; கவிதை என்பது ரசனையின் உச்சம்; கவிதை என்பது வாள்வீச்சு. ஆனால், சமீபகாலமாக கவிதையின் வீச்சு குறைந்து வருகிறது. கவிதையில் சொற்சிக்கனம் இருக்கலாம். ஆனால், கவித்துவம் இல்லாமல் வார்த்தைகளின் புலம்பலாக அது இருந்துவிடக்கூடாது. இதுதான் கவிதை என்று இலக்கணம் வகுக்க முடியாது. கவிதையை எவ்வித வரம்புக்குள்ளும் அடைக்கவும் கூடாது. அது ஒரு மனநிலை.

தினமணி டாட் காம் வாசகர்களின் அத்தகைய மனநிலையைப் படம்பிடித்து வெளியிடத் தயாராக இருக்கிறோம். கவிதைமணி என்ற இந்தப் பகுதி, முழுக்க முழுக்க கவிதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் தங்களுடைய கவிதைகளை இங்கே மற்றவர்களுக்குப் படைக்கலாம். புதுக் கவிதை, மரபுக் கவிதை, ஹைக்கூ எந்த வகையாக இருந்தாலும், நாங்கள் சொல்லும் தலைப்புக்குள் ஒரு கவிதையை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள், ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று தொகுத்து வெளியிடப்படும். எழுதியவர் விரும்பினால், அவருடைய புகைப்படம் மற்றும் தொடர்புக்கான தகவல்களும் வெளியிடப்படும். இது உங்கள் தளம். ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். இந்தக் கவிதைப் பயணத்தில் ஒவ்வொரு வாரமும் எங்களுடன் இணைந்திடுங்கள். தளத்தில் கவிதைகள் வெளியாகவில்லை எனில் கவலைப்பட வேண்டாம். உங்கள் படைப்புகளை அனுப்பிக்கொண்டே இருங்கள். அடுத்தடுத்த வாரங்கள் உங்களுடையதாகக்கூட இருக்கலாம்.

கவிதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - kavidhaimani@gmail.com

கவிதைமணி

பறவை என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1

பறவை இனங்கள் பலவிதம்,  பார்க்க பார்க்க பரவசம்

28-08-2019

பறவை என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 2

யாவருமே யதன் கூடிவாழும் பழக்க வழக்கங்களை

28-08-2019

இந்த வார கவிதைமணி தலைப்பு: சிரிப்பு

கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..! 

28-08-2019

பறவை என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதை பகுதி 3

பறவை போல நாமிருப்போம் பறப்போம் இன்பப் பயனடைவோம் !

28-08-2019

அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1

ஆதாயம் தேடாத அரசியல் வேண்டும் அதுவும் தொண்டு செய்வதற்குமான முழு நிலை வேண்டும்

21-08-2019

அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 2

இலக்கணத்தில் அணி வகையுண்டு அரசியலிலும் அணி வகையுண்டு 

21-08-2019

இந்த வார கவிதைமணி தலைப்பு: பறவை

கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..! 

21-08-2019

அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 3

நாடாளவே,  நமையாளவே, செயல் கோர்க்கும் கொள்கை அரசியல் !

21-08-2019

இந்த வார கவிதைமணி தலைப்பு: அரசியல்

கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..! 

15-08-2019

'பொம்மை' வாசகர் கவிதை பகுதி 3

ஆடவொரு மேடை அதிலெம்மைப் பொம்மைகளாய்
வேடமிட்டு விட்டவனோ வெறுங்காலில் ஆடவிட்டான்

15-08-2019

'பொம்மை' வாசகர் கவிதை பகுதி 2

பூனை கிளியும் புலிகளும் புல்லும் மரமும் செடிகளும்
யானை பாம்பு பல்லியும் ஆன தலைவர் புலவரும்

14-08-2019

'பொம்மை' வாசகர் கவிதை பகுதி 1

விவசாயம் கைகொடுக்கவில்லை வாழ்வாதாரம் செழிக்கவில்லை

14-08-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை