சுருள் போளி

செய்முறை: மைதா மாவில் உப்பு, நெய் சேர்த்து கலந்து சிறிது தண்ணீர்விட்டு பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
சுருள் போளி

தேவையானவை:

மைதா - 1 கிண்ணம்

சர்க்கரை - 1 கிண்ணம்

நெய் - 1 தேக்கரண்டி

உப்பு - 1 துளி

பாதாம் - 4-5

குங்குமப்பூ - 5

எண்ணெய் - தேவைக்கேற்ப

பூர்ணம் செய்ய :

உடைத்த கடலை - 1 கிண்ணம்

கொப்பரைத் தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்

சர்க்கரை - 3/4 கிண்ணம்

முந்திரி - 2

ஏலக்காய் - 4

செய்முறை: மைதா மாவில் உப்பு, நெய் சேர்த்து கலந்து சிறிது தண்ணீர்விட்டு பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து பூர்ணம் செய்து கொள்ள வேண்டும்.

உடைத்த கடலை, ஏலக்காய், சர்க்கரை மூன்றையும் மிக்ஸியில் போட்டு லேசாக அடித்துக் கொள்ளவும். பின்னர், அவற்றுடன் கொப்பரைத் தேங்காய்த் துருவல், முந்திரி சேர்த்து நன்றாக அடித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர், 1 கிண்ணம் சர்க்கரையில், 1 டம்ளர் தண்ணீர்விட்டு சர்க்கரைப் பாகு காய்ச்சி இறக்கி, குங்குமப்பூ தூவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு பிசைந்து வைத்துள்ள மைதாமாவைப் பூரிகளாக சுட்டெடுக்கவும் ( பூரி நன்கு பொரியக் கூடாது. அரை வேக்காடு அல்லது முக்கால் வேக்காடு இருந்தால் போதும்).

சுட்டெடுத்த பூரிகளை ஒவ்வொன்றாக சர்க்கரைப் பாகில் நனைத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் அரைத்து வைத்து பூர்ணத்தை வைத்து ரோல் செய்து மேலே துருவிய தேங்காய்த் துருவல், முந்திரி, பாதாம் தூளைத் தூவி பரிமாறவும். சுவையான சுருள் போளி ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com