பனீர் பாயசம்

பாலை 4 டம்ளர் அளவிற்கு வற்றும் வரை சுண்ட காய்ச்சவும்.
பனீர் பாயசம்

தேவையான பொருள்கள்:

பால் - 5 டம்ளர்
பனீர் - 200 கிராம்
சர்க்கரை - 1 1/2 கிண்ணம்
மில்க்மெய்ட் - 2 தேக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் - சில துளிகள்
குங்குமப்பூ - 1 தேக்கரண்டி

செய்முறை:

பாலை 4 டம்ளர் அளவிற்கு வற்றும் வரை சுண்ட காய்ச்சவும்.

சர்க்கரையில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து அத்துடன் மிகவும் பொடியாக நறுக்கிய பனீரைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி ஆறவிடவும்.

பனீர் ஆறியதும் காய்ச்சிய பாலில் சேர்த்து அத்துடன் மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

பின்னர், வெண்ணிலா எசன்ஸ், குங்குமப்பூத் தூவி சூடாகவோ அல்லது ஃபிரிட்ஜில் வைத்து குளிர வைத்தோ பரிமாறவும். பனீர் பாயசம் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com