தேவையானவை:
பிரண்டை - நான்கு துண்டு
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
சின்ன வெங்காயம் உரித்தது அரை கிண்ணம்
மிளகாய் வற்றல் - ஐந்து
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பிரண்டையை நார் நீக்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்னர், பிரண்டையைத் தவிர மற்ற பொருள்களை நன்கு வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பிறகு பிரண்டையை நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்னர், அனைத்தையும் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். பிரண்டைத் துவையல் தயார்.