தேவையானவை:
கொள்ளு - ஒரு கைப்பிடி
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 5 பற்கள்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சைக் கொள்ளை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து புளித் தண்ணீருடன் சேர்த்து கலக்க வேண்டும்.
பின்னர், புளித் தண்ணீருடன் அரைத்த கொள்ளு, மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பச்சை கொள்ளு சூப் தயார்.