திரிகடுகு ரசம்

திரிகடுகு ரசம்

தேவையான பொருள்கள்:

நைசாகப் பொடித்த - சுக்கு, மிளகு,
திப்பிலி, சீரகம், ஓமம்  - தலா 2 தேக்கரண்டி
பழுத்த பெரிய தக்காளி - 1
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
தாளிக்க - எண்ணெய் 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

துவரம் பருப்பு, தக்காளி, புளி, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விடவும். நைசாகப் பொடித்த மூலிகைப் பொடியை  ஒரு தேக்கரண்டி நெய்விட்டு வறுத்துக் கொள்ளவும்.

பின்னர், வேகவைத்த துவரம் பருப்பு கலவையை நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் வறுத்து வைத்துள்ள பொடியை சேர்த்துக் கிளறவும். பின்னர், நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பருப்பில் கொட்டி தேவையான அளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும்.

லேசாக கொதி வந்ததும் இறக்கி, கொத்துமல்லி தழையைத் தூவி 5 நிமிடம் மூடி வைத்து பரிமாறவும். ஆரோக்கியமான திரிகடுகு ரசம் தயார்.

(விருப்பமுள்ளவர்கள்: தாளிக்கும்போது 2 பல் பூண்டை இடித்து ரசத்தில் சேர்க்கலாம்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com