வெற்றிலை பஜ்ஜி

தேவையானவை:

வெற்றிலை - 10
கடலைமாவு - 100 கிராம்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - 1 சிட்டிகை
பஜ்ஜி மசாலாவிற்கு
பூண்டு - 2 பல்
சின்ன வெங்காயம் -2
மிளகாய் வற்றல் - 2
ஓமம் - கால் தேக்கரண்டி

செய்முறை:

வெற்றிலையை நன்றாக கழுவி துடைத்து எடுத்து வைக்க வேண்டும். பின்னர், மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் நைசாக அரைத்து கடலை மாவுடன் சேர்க்கவும்.

அத்துடன் உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு சற்று கெட்டியான தோசைமாவு பதத்திற்கு கலக்கவும்.  

பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், வெற்றிலையை இரண்டாக மடித்து கடலைமாவில் தோய்த்து எடுத்து எண்ணெய்யில் சுட்டு எடுக்கவும்.

வெற்றிலை பஜ்ஜி தயார். மழைக்கால மாலை வேளைகளில் இந்த பஜ்ஜி குளிருக்கு இதமாகவும், வயிற்றுக்குப் பதமாகவும் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com