கொத்துமல்லி பாஸ்தா

மூன்றையும் கழுவிக் காயவைத்து வறுத்து அரைத்து வைக்கவும். இது தான் பாஸ்தா செய்ய தேவையான மாவு.
கொத்துமல்லி பாஸ்தா

தேவையான பொருட்கள்

வரகு-1/2 கிலோ
சாமை-1/2கிலோ
குதிரைவாலி-1/2கிலோ
மூன்றையும் கழுவிக் காயவைத்து வறுத்து அரைத்து வைக்கவும். இது தான் பாஸ்தா செய்ய தேவையான மாவு.

பாஸ்தா செய்யும் முறை

தேவையான பொருட்கள்    
மாவு- 1 கிண்ணம்
கொதி நீர்- தேவையான அளவு
உப்பு-சிறிது

செய்முறை:

மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். விருப்பமான வடிவில் செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

வெந்த பாஸ்தாக்களை சிறிது ஆற வைக்கவும். தற்போது பாஸ்தா தயார். இதனை வைத்து தக்காளி பாஸ்தா செய்யலாம்.

கொத்துமல்லி பாஸ்தா தேவையான பொருட்கள்

கொத்துமல்லித் தழை - ஒரு கட்டு
மிளகாய் வற்றல் - 4
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
உப்பு
பெரிய வெங்காயம் - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)
கரம் மசாலாத்தூள்
இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
பச்சை மிளகாய் - 2
பூண்டு பல் - 2

செய்முறை:

இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு இம்மூன்றையும் அரைத்துக் கொள்ளவும்.

எண்ணெயில் மிளகாய் வற்றலை வறுக்கவும். தக்காளி போட்டு வதக்கவும். பின் கொத்துமல்லித் தழை, உப்பு போட்டு வதக்கி அரைக்கவும். தனியே வைக்கவும்.

எண்ணெயில் வெங்காயத்தை வதக்கவும். நிறம் மாறியவுடன் அரைத்த இஞ்சி விழுது, உப்பு போடவும். வதக்கவும்.

கொத்துமல்லித் தழை அரைத்ததை வெங்காயத்தில் ஊற்றவும். நீர்த்தன்மை வற்றும் வரை கிண்டவும். கரம் மசாலாத் தூள் போடவும். இதில் வெந்த பாஸ்தாக்களைப் போட்டுக் கிளறவும்.

இது கொத்துமல்லி பாஸ்தா.

இந்த மாலை நேர சிற்றுண்டி மிக ருசியானது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com