ஓட்ஸ் பாயசம்

சர்க்கரை, கோவா சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
ஓட்ஸ் பாயசம்


தேவையான பொருள்கள்:

பால் - 4 டம்ளர்
ஓட்ஸ் - அரை கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
கோவா - 2 மேசைக்கரண்டி
நெய்யில் வறுத்துப் பொடித்த பாதாம், முந்திரி - தலா 1 மேசைக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

பாலுடன் 1 டம்ளர் தண்ணீர்விட்டு காய்ச்சவும். அதில் ஓட்ûஸ சேர்த்து நன்கு வேகவிடவும்.

அத்துடன் சர்க்கரை, கோவா சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

பின்னர், ஏலக்காய்த் தூள், பொடித்த பாதாம், முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து கலந்து பரிமாறவும்.

ஓட்ஸ் பாயசம் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com