உள்ளி தீயல்

சூடாக சாப்பிட உள்ளி தீயல்
உள்ளி தீயல்


தேவையானவை         

உள்ளி (சின்ன வெங்காயம்) - 10 அல்லது 15
புளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு
தேங்காய் துருவியது - கால் கப்
காய்ந்த மிளகாய் - 7
தனியா - ஒரு தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
வெந்தயப் பொடி - ஒரு சிட்டிகை
சர்க்கரை - ஒரு சிட்டிகை (தேவையென்றால்)
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை

உள்ளியை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும். புளியை ஊறவைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பிறகு தேங்காயை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

மிளகாய் (5), மல்லி, மிளகு மற்றும் சீரகத்தை வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் (2), பெருங்காயம், வெந்தயப்பொடி சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய உள்ளியை சேர்த்து சிவக்க வதக்கவும். பின்பு கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அரைத்தப் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். சுவையான உள்ளி தீயல் சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com