பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 7

அம்மானாகிய சிவபெருமான்
பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 7


பாடல் 7

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்,
தெருள் கொள் பிரமன் அம்மானும், தேவர்கோனும், தேவரும்,
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை,
மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலை மலையே.

முக்கண் அம்மானாகிய சிவபெருமான், எம்பெருமான் திருமாலை வணங்கி, ‘அம்மானே, அருளை ஈவாய்’ என்று கேட்கிறார், தெளிவுள்ள அறிவைக்கொண்ட பிரமனும், தேவர் தலைவனும், மற்ற தேவர்களும், இருளை விலக்கும் முனிவர்களும் திருமாலைப் போற்றுகிறார்கள், அத்தகைய எம்பெருமானின் திருமலை, மருட்சியை விலக்குகின்ற மணிமலை, திருமாலிருஞ்சோலை மலையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com