உலக சினிமா

உலக சினிமா - செழியன்; பக்.254; 120. உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தி ஆனந்த விகடனில் ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய கட்டுரைகளே இந்நூல். பல்வேறு தரப்பினரின் கவனத்தைக் கவர்ந்த சினிமாக் கட்டுரைகள் ஏற்கனவே இர
உலக சினிமா

உலக சினிமா - செழியன்; பக்.254; 120.

உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தி ஆனந்த விகடனில் ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய கட்டுரைகளே இந்நூல். பல்வேறு தரப்பினரின் கவனத்தைக் கவர்ந்த சினிமாக் கட்டுரைகள் ஏற்கனவே இரண்டு பாகங்களாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இது மூன்றாம் தொகுப்பு. இதில் இருபதுக்கும் மேற்பட்ட உலகின் சிறந்த சினிமாக்களை கண் முன் நிறுத்துகிறார் நூலாசிரியர். "மை அங்கிள்' "எம்', "தி பேர்ட்ஸ்' என அனைத்துமே ரசனைக்குரிய படங்கள். சினிமா ஆர்வலர்களுக்கு இந்நூல் இன்னும் புதிய அனுபவத்தையும், சினிமா ரசனைக்கு நல்ல வழிக்காட்டுதலையும் அளிக்கும்.

மேற்கண்ட இரண்டு நூல்களையும் வெளியிட்டோர் விகடன் பிரசுரம், சென்னை. )044-42634283.

செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி - முனைவர் க. பசும்பொன், ச. அய்யங்காளை, முனைவர் வீ. ரேணுகாதேவி; பக்.200; 90; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. )044- 26258410.

ஆணும் பெண்ணும் உள்ளத்தால் பொய்யாது ஒழுகும் கற்பு வாழ்க்கையே உயர் வாழ்க்கை-இதுவே பண்டைத் தமிழர்களின் கற்பு குறித்த வரையறை. தொல்காப்பியம் தொடங்கி காலத்தால் அழியாத கன்னித் தமிழ் இலக்கியங்களான  குறிஞ்சி, முல்லைப்பாட்டு, நற்றிணை, நாலடியார், குறுந்தொகை, குறள், மணிமேகலை உள்ளிட்ட பல்வேறு நூல்களில் கூறப்பட்டுள்ள கற்பு குறித்த இலக்கணங்களை ஆழமாகவும், விரிவாகவும் அலசுகின்றன இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள். கற்பின் ஆற்றல் மீதான பழந்தமிழர்களின் புரிதல், நம்பிக்கை, அதை அவர்கள் எவ்வாறு கடைப்பிடித்தனர், கற்புநெறி ஒழுக்கத்தை உயிரென மதித்துப் போற்றிய விதம் போன்றவற்றை இலக்கிய வரிகளுடன் எடுத்துக் கூறும் 19 கட்டுரையாளர்களின் 18 கட்டுரைகள் அடங்கிய இந்நூல், தமிழ் இலக்கியங்கள் மீது இளைய தலைமுறைக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் எளிமையாக அமைந்துள்ளது சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com