துயில்

துயில்- எஸ்.ராமகிருஷ்ணன்; பக்.526; ரூ.350; உயிர்மை, சென்னை-18, )044-24993448. மூன்று வாழ்க்கைச் சித்திரங்களின் கலவைதான் துயில். ஒன்று, துப்புக்கெட்ட கணவன் அழகனின் வற்புறுத்தலால் திருவிழாக்களில் கடல்கன
துயில்

துயில்- எஸ்.ராமகிருஷ்ணன்; பக்.526; ரூ.350; உயிர்மை, சென்னை-18, )044-24993448.

மூன்று வாழ்க்கைச் சித்திரங்களின் கலவைதான் துயில். ஒன்று, துப்புக்கெட்ட கணவன் அழகனின் வற்புறுத்தலால் திருவிழாக்களில் கடல்கன்னி வேடம் போடும் சின்னராணி, தன்னை பலாத்காரம் செய்தவனைக் (மாயக்கண்ணாடி அரங்கம் நடத்தும் தம்பான்) கொன்றுவிடுகிறாள். இரண்டாவது, நோயாளிகளுக்கு ஆறுதல் தந்து அன்பினால் நோயைப் புரிந்துகொள்ளச் செய்து, வலி தணிக்கின்ற எட்டூர் மண்டபம் அக்காவிடம் வருவோரின் கதைகள். மூன்றாவது, தெக்காட்டுக்கு 1870-களில் வந்த ஆங்கிலேய பெண் மருத்துவர் ஏலன் பவர் என்பவர் அன்றைய நாளில் கண்ட நோயாளிகள், மூடநம்பிக்கைகள், எதிர்கொண்ட பிரச்னைகள். ஆசிரியரின் மொழிநடையும் விவரிப்புகளும் அசாத்தியமானவை. தத்துவத்தின் உச்சங்களைத் தொடும் இடங்கள் நிறைய. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அருகாமை என்றும், இரண்டு இடங்களில் வானவேடிக்கை என்றும் இருப்பதை அடுத்த பதிப்புகளிலாவது மாற்றலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com